அரசு வக்கீல் ஆக… பார் கவுன்சிலுடன் இணைந்து மனித நேய மையம் இலவச பயிற்சி!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 61அரசு குற்றவியல் வக்கீல் பணி தேர்வுக்கு சைதை துரைசாமியின் மனிதநேய மையம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுடன் இணைந்து வருகிற ஜனவரி 5-ந்தேதி முதல் இலவச பயிற்சி வகுப்பு நடத்துகிறது.
61 அரசு வக்கீல் பணி
தமிழ்நாடு அரசு பணியாளர் தேவாணையம் [டி.என்.பி.எஸ்.சி] 61 அரசு உதவி குற்றவியல் வக்கீல் [நிலை-2] பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை கடந்த 2-ம்தேதி வெளியிட்டது. இதைத்தொடர்ந்து இந்த தேர்வை எழுதுவதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த பணிக்கான முதல்நிலை தேர்வுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுடன் இணைந்து மனிதநேய மையம் இலவச பயிற்சி வகுப்பை நடத்த உள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், முன்னாள் மேயரும், அறக்கட்டளை தலைவருமான சைதைதுரைசாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது.
தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 61 அரசு உதவி குற்றவியல் வக்கீல் பணிக்கான முதல் நிலைத்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பை வருகிற ஜனவரி 5-ந்தேதி முதல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுடன் இணைந்து மனிதநேய கட்டணமில்லா ஐ.ஏ.எஸ். கல்வியகம் நடத்துகிறது.
இந்த பயிற்சி வகுப்பில் சேரவிரும்பும் மாணவர்கள் இன்று [ஞாயிற்றுகிழமை] முதல் ஜனவரி 4-ந்தேதி வரையில் சென்னை சி.ஐ.டி.நகர் முதல் பிரதான சாலையில் அமைந்துள்ள மனிதநேய மைய அலுவலகத்துக்கு ‘ பாஸ்போர்ட்’ அளவு புகைப்படத்தை எடுத்து வந்து விண்ணபிக்கலாம்.
நேரில் வருவதற்கு இயலாதவர்கள் 044-24358373,24330952,25352595 ஆகிய தொலைபேசி எண்கள் அல்லது 9840439393,8428431107 ஆகிய செல்போன் எண்கள் மூலமாகவும் அல்லது www.mntfreeias.com எனற இணையத்தில் குறிபிட்ட தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை பதிவு செய்துக்கொள்ளலாம்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில்,மனிதநேய மையம் இணைந்து ஏற்கனவே நடத்திய இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்று தேர்வில் வெற்றி பெற்று சிவில் நீதிபதிகளாக 267 பேரும், மாவட்ட நீதிபதிகளாக 9 பேரும் அரசு உதவி குற்றவியல் வக்கீல்களாக 22 பேரும் என மொத்தம் 298 பேர் பதவியில் உள்ளனர். என்று அவர்கள் கூறியுள்ளனர்.
