ரிலீஸுக்கு முன்பே சாதனை படைத்துவரும் ‘குட் பேட் அக்லி’!

ரிலீஸுக்கு முன்பே சாதனை படைத்துவரும் ‘குட் பேட் அக்லி’!

‘விடாமுயற்சி’ படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து முடித்துள்ளார் அஜித். தற்போது அவர் கார் ரேஸிங்கில் பிஸியாக இருக்கிறார். மறுபுறம் ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

24 மணி நேரத்தில் 30 மில்லியன் வியூஸ்களை தாண்டி சாதனை படைத்தது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் அர்ஜுன் தாஸ், பிரசன்னா, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், ‘குட் பேட் அக்லி’ படக்குழு, படத்தின் டீசர் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ, வெளியான நான்கு மணி நேரத்தில் ஐந்தரை லட்சம் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது!

 

Related Posts