“ஐடியா கொடுத்த ஞானவேல்ராஜா, தனஞ்செயன்!”: நெகிழ்ந்த சந்தானம்..!

“ஐடியா கொடுத்த ஞானவேல்ராஜா, தனஞ்செயன்!”: நெகிழ்ந்த சந்தானம்..!

கல்யாண் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில், சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “80’ஸ் பில்டப்”.  நாயகியாக ராதிகா ப்ரீத்தி நடிக்க, பிற முக்கிய கதாபாத்திரங்களில் ஆடுகளம் நரேன்,  இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், மொட்டை ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், இயக்குநர் சுந்தர்ராஜன்,  தங்கதுரை, சுவாமிநாதன், கும்கி அஷ்வின், சுபாஷினி கண்ணன், சங்கீதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைக்க, ஜேக்கப் ரத்தினராஜ்  ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட   நடிகர் சந்தானம் பேசும் போது,
“எல்லோருக்குமே வாழ்வில் ஒரு பயம் வரும். அப்படி ஒரு பயம் வரும் போதெல்லாம் என் பின்னால் இருந்து என்னை தாங்கிப் பிடிக்கும் என் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி.

நான் நாள்கணக்கில் கொஞ்சம் அதிகம் சம்பளம் வாங்கிக் கொண்டு இருந்த காலத்தில் என்னை அணுகி, இடம் வாங்கி விட்டீர்களா..? என்று கேட்டார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.. இல்லை என்றதும் நாள் கணக்கில் சம்பளம் வாங்குவதை விட்டுவிட்டு மூன்று படங்களுக்கு மொத்தமாக சம்பளம் வாங்கிக் கொள்ளுங்கள். அதில் ஒரு இடத்தை வாங்குங்கள்” என்று வழிகாட்டி என்னை முதன்முதலாக இடம் வாங்க வைத்த தயாரிப்பாளர் அவர் தான். தானும் வளர வேண்டும். தன்னுடன் சேர்ந்து மற்றவர்களும் வளர வேண்டும் என்கின்ற நல்லெண்ணம் அவருக்கு உண்டு.

தவிர, என் படங்கள் சரியாக போகாத போது, வீட்டிற்கு வந்து என்னுடன் கலந்தாலோசித்து எனக்கு ஆலோசனைகள் வழங்குவார்.

அது போல் தனஞ்ஜெயன் சார் தயாரிப்பில் கண்டேன் காதலை படத்தில் நடிக்கும் போது ஒரு கிராமத்து கெட்டப் கொடுத்து ஒட்டு மீசையோடு நடிக்க வைத்தது தனஞ்ஜெயன் சாரின் முடிவு தான். தயாரிப்பாளராக மட்டுமின்றி  கதாபாத்திர வடிவமைப்பையும் யோசிக்கும் தனஞ்ஜெயன் உடன் இருக்கும் போது ஸ்டுடியோ க்ரீன் இன்னும் பல உச்சங்களை தொடும் என்று நம்புகிறேன்” என்று சந்தானம் பேசினார்.

Related Posts