‘ மாமன்னன்’ கீதா கைலாசத்தின் முதல் படம் எது தெரியுமா? 

‘ மாமன்னன்’ கீதா கைலாசத்தின் முதல் படம் எது தெரியுமா? 

மாமன்னன்.  படத்தில் வடிவேலுவின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்த கீதா கைலாசம் பரவலான பாராட்டுக்களைப் பெற்று வருகிறார். இதற்கு முன் சார்பட்ட பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது, வீட்ல விசேசங்க படங்களிலும் சிறு வேடங்களில் தோன்றினாலும்  கவனத்தை ஈர்த்தார்.  

இவர் முதன் முதலில் நடித்த படம், கட்டில். ஆம்.. இவரது நடிப்பாற்றலுக்கு முதன் முதல் திரைக்ககளம் அமைத்துக் கொடுத்தவர் அப்படத்தை நடித்து, இயக்கி, தயாரிக்கும்  இ.வி.கணேஷ்பாபு. அந்த  படத்தில் குடும்பத்தலைவி வேடத்தை கீதா கைலாசத்துக்கு அளித்தார்.அப்படத்தின் போஸ்டர்களிலேயே கவனத்தை ஈர்த்தார் கீதா.   பொங்கல் பண்டிகையின் போது குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து பொங்கல் வைக்கும் காட்சி. அதில் ஒரு தாயாகவே உருமாறி காட்சி அளிக்கிறார்.   நான்கு மொழிகளில் உருவாகி இருக்கும் கட்டில் திரைப்படம் வெளியான பிறகு, கீதாவின் திரை அந்தஸ்து மேலும் உயரும் என்பதில் சந்தேகமில்லை.  

 

 

 

 

Related Posts