ஜெயலலிதாவை பின்தொடரலாம்..! முதல்வருக்கு சைதை துரைசாமி வேண்டுகோள்;
கொரோனா வைரஸால் பலரை காவுகொடுத்து வருகின்ற சூழ்நிலையில் “பாரம்பரிய சித்த வைத்தியம் கொரோனாவை அழிக்கும்” என முன்னால் மேயர் சைதை துரைசாமி முதல் அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
முன்னாள் மேயர், மனித நேயர், என அன்போடு மக்களால் அழைக்கப்படும் சைதை துரைசாமி அவர்கள். பாரம்பரிய மருந்துவத்தை கொரோனா அழிக்கப்பயன்படுத்தலாமே என முதல்வருக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்
அந்த கடிதத்தில் டெங்கு காய்ச்சல் பரவிய காலத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அவர்கள் எடுத்த நடவடிக்கையை அவர் சுட்டிக் காட்டி அதுபோல் நீங்களும் செயல் படலாம் என கூறியுள்ளார்.
டெங்கு, சிக்கன்குனியா, ஆகிய வைரஸ் தொற்று ஏற்பட்ட சூழ்நிலையில் நில வேம்புக் குடிநீர், பப்பாளி இலைச்சாறு இரண்டையும் அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பொது இடங்களில் இலவசமாக வழங்க, ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்ததை அவர் தெரிவித்துள்ளார்.
நம் முன்னோர்கள் காட்டிய மருத்துவம் கொரோனா வைரசை அழிப்பதற்கும், தடுத்து நிறுத்துவதற்கு நிச்சயம் பயன்படும். எல்லா வைரஸ்க்கும் சித்த வைத்தியத்தில் நிச்சயம் மருந்து உண்டு. நம் மனித இனத்தை காப்பதற்கு வழிகாட்டியாக அமையும் என்றும் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தி வெற்றியடைய வாழ்த்துக்கள்.
என்று தனது கடிதத்தில் கூறியிருக்கிறார்.