’’கொரோனா டாக்கீஸ்’’ பால் பாக்கெட் வைரஸ் கவனம்! இயக்குநர் மாரிமுத்து..!
கொரோனா வைரஸ் நம்மை நெருங்காமல் தற்காத்துக் கொள்ள எத்தனையோ உபதேசங்களும் உஷார் மொழிகளும் தினந்தோறும் உங்களுக்கு வந்து கொண்டிருக்கும்…
நம் வீடுதேடிவரும் வைரஸ் பால் பாக்கட்?
கொஞ்சம் சளிப்பும் வெறுப்பும்
கொண்டிருப்பீர்கள்…
பரவாயில்லை…
இது இன்னும் கொஞ்சம் முக்கியமானது…
மருத்துவரும் நல்லதொரு சமூகப்பார்வையும் கொண்ட ஒரு நண்பரிடமிருந்து எனக்கொரு அறிவுரை வந்தது.
தினந்தோறும் வெளியில் இருந்து
நம் வீட்டுக்கு வந்தே தீர வேண்டியதும்
நாம் கைகளால் தொட்டே
ஆக வேண்டியதுமான ஒரு பொருள்
பால் பாக்கெட்…
குளிர்ந்த நிலையில் இருப்பதாலும் பல்வேறு கைகளால் தொடப்பட்டு வருவதாலும் பால் பாக்கெட்கள் வைரஸ் சுமந்துவர நிறைய வாய்ப்புகள் உள்ளதாம்…ஆகயால் வீட்டுக்கு வரும் பால் பாக்கெட்களை நேரடியாக கையில் தொடாதீர்கள். கிச்சனில் இருக்கும் இடுக்கியால் கவ்வி எடுத்து தண்ணீர்ல் போட்டு கழுவிய பிறகு பிரிட்ஜில் வையுங்கள்.
அல்லது வீட்டு வாசலில் ஒரு பாத்திரத்தில் பால் பாக்கெட் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் வைத்து அதில் பால் பாக்கெட்டுகளைப் போட்டு விட்டுப் போகச் சொல்லுங்கள். இது பின்பற்ற வேண்டிய விஷயமாகவே எனக்குப் படுகிறது..’
பகிர்க…
பின்பற்றுக…
நன்றி..
-மாரிமுத்து (நடிகர்-இயக்குநர்)
இவ்வாறு யாரும் யோசிக்காத விழிப்புணவை ஏற்படுத்தியுள்ளார். அட ஆமா…!