திரைப்பட இயக்குநர் முத்து – கீதா திருமணம்! திரையுலகினர் வாழ்த்து!
திரைப்பட இயக்குநர் முத்து – கீதா திருமணத்தில் கலந்துகொண்டு திரையலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இயக்குனர் ஷங்கரின் எந்திரன், சிவாஜி உள்ளிட்ட திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி, பிறகு ‘திறந்திடு சீசே’, ‘சிக்கலெட்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் முத்து.இவருக்கும் கீதாவுக்கும் திருமணம் சிறப்புற நடந்தது. மேலும், சென்னை போரூரில் உள்ள சங்கீத மஹாலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது.
இந்நிகழ்வில், இயக்குனர்கள் மோகன்ஜி வினோத்குமார் மற்றும் நடிகர்கள் ஸ்ரீமன், பவர் ஸ்டார் சீனிவாசன் தயாரிப்பாளர்கள் மதுரை செல்வம். ஸ்டாலின் மற்றும் ஒளிப்பதிவாளர் கொளஞ்சி குமார் இயக்குனர் சங்கம் சார்பாக கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்