ரசிகர்களுக்கு விருந்து? ‘மாஸ்டர்’ திரை விமர்சனம்
சென்னை; நடிகர் விஜய் – விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ’மாஸ்டர்’ இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இருவரின் கூட்டணியில் திரைக்கு வந்திருக்கிறது மாஸ்டர். இந்த படம் குறித்த தகவல் வெளிவந்ததுமே ரசிகர் மத்தில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. விஜய் சேதுபதி இந்த படத்தில் இணைகிறார் என்ற தகவல் பரவியதும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்பப்படுத்தியது.
கொரோனா தொற்று காரணமாக 50 சதவிகித இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு இருப்பதால் இந்தப் படம் நேற்று திரைக்கு வந்தது. ரசிகர்கர்கள் பெரிதும் எதிர்பார்த்த இந்த திரைப்படம் பொங்கள் விடுமுறையில் வெளிவந்துள்ளதால் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கதை களம்;
சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் இருக்கும் மாணவர்களை தன்னுடைய சுயநலத்துக்காகவும் ஆதாயத்துக்காக தவறான முறையில் பயன்படுத்துகிறார் விஜய் சேதுபதி. ஒரு கல்லூரி பேராசிரியரான விஜய் கண்டிப்பதுதான் மாஸ்டர் படத்தின் கதைகரு. இதை மூன்று மணிநேர சினிமாவாக எடுத்து ஜெயித்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
இந்த படத்தின் கதாநாயகனாக விஜய் இருந்தாலும் படத்தின் கதையை தாங்கி பிடித்திருக்கிறார் விஜய் சேதுபதி.
படத்தின் முதல் பாதியில் குடிக்கு அடிமையான பேராசிரியராகவும் இரண்டாம் பாதியில் சீர்த்திருத்த பள்ளி ஆசிரியராகவும் விஜய்க்கு இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.இந்த படத்தில் அரசியல் விழிப்புணர்வு மாணவர்மத்தியில் முன்னிறுத்தி பேசியிருக்கிறார் விஜய்.
பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் அரசியல்வாதிகள் மற்றும் மக்கள் கூறும் கருத்துக்களை அரசாங்கம் கேட்பதில்லை போன்ற அரசியல் வசனங்களும் இந்த படத்தில் இடம்பெறுகின்றன. விஜய், விஜய் சேதுபதிக்கு அடுத்தபடியாக துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ் மற்றும் பூவையார் ஆகியோர்களும் மனதில் நிற்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். மொத்தத்தில் இந்த பொங்கலுக்கு மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு விருந்து என்பதே உண்மை.
யாழினி சோமு