‘கொரோனா டாக்கீஸ்’ நச்சினு ஒருவார்த்தை பாக்யராஜ்…!

கொடிய நோயான கொரோனா வின் பிடியில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்வது எனபதை தனது பானியில் விளக்கியுள்ளார் நடிகர் பாக்யராஜ். – சரியான இடைவெளியில் நம் கைகளை சுத்தம் செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, கொரோனா விழிப்புணர்வு  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் பாக்யராஜ்.

அதில் அவர் ஒவ்வொருவருக்காக போன் செய்கிறார் சொல்லி வைத்து போல் எல்லோரும் அவர் போன் செய்யும் போது கை கழுவச்சென்று விடுகின்றனர். நான் பாக்யராஜ் பேசுகிறேன்.’’  சம்பந்தப் பட்டவர்கள் கை கழுவப் போயிருக்கிறார்கள் என்று பதில் வருகிறது. இறுதியில் அவருக்கு போன் வருகிறது.   ஹலோ  நான் கை கழுவி விட்டு பேசுகிறேன் என்று போனை வைத்துவிடுகிறார்.

அவரது படம் மாதிரியே வசனங்கள் குறைக்கப்பட்டு செயலுக்கு உயிர் ஊட்டப்படுகிறது இந்த வீடியோ… சொல்வதை தெளிவாக ஒரே வார்த்தையில் கூறியிருக்கிறார்.