“மேயர் பொறுப்பில் கூடுதலாக மனநிறைவு அளித்த பணிகள்!: சைதையார்

“மேயர் பொறுப்பில் கூடுதலாக மனநிறைவு அளித்த பணிகள்!: சைதையார்

சென்னை பெருநகர மேயர் பொறுப்பில்  இருந்தபோது, பல்வேறு மக்கள் பணிகளை அரசு ரீதியாகவும் செய்தவர் சைதையார் என்பதை அனைவரும் அறிவர்.

அவரிடம், “நீங்கள் மேயராக இருந்த போது நீங்கள் செய்த பணிகளில் உங்களுக்கு மிகுந்த மன நிறைவை அளித்த  பணி எது?” என்ற கேட்கப்பட்டது.

அதற்கு சைதையார் அளித்த பதில்:“காமராஜர் ஏழை மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டம் கொண்டுவந்தார். புரட்சித்தலைவர் அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் சத்துணவுத் திட்டம் கொண்டுவந்தார். சைதாப்பேட்டையில் நான் மனிதநேய அறக்கட்டளை மூலம் நடத்தி வந்த  மலிவு விலை உணவகத்தை, அம்மா உணவகமாக மாற்றி சென்னை மாநகராட்சியில்  அறிமுகம் செய்தேன்.

இத்திட்டத்தை  அப்போதைய முதலமைச்சர், புரட்சித்தலைவி அம்மா அவர்கள், தமிழ்நாடு முழுதும் விரிவாக்கினார்.

அது மட்டுமல்ல.. அந்தத் திட்டம்  இன்று  இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி ஒருசில வெளிநாடுகளிலும்  செய்கின்றனர்.ஏழைகள் ஒரு நாளில் 20 ரூபாய் செலவில் வயிறு நிறைய சத்தான உணவு சாப்பிட  முடியும் எனும் அளவுக்கு நான் அறிமுகம் செய்த  அம்மா உணவகம்தான் எனது மனதுக்கு நிறைவானது.

டெங்குக் காய்ச்சலுக்கு மருந்து  இல்லை  என்று ஆங்கிலேய  மருத்துவர்கள் கூறிவந்த நிலையில், சித்த மருத்துவத்தில் மருந்து இருப்பதை அறிந்தேன்.அதனை கிங் இன்ஸ்டிடியூட்டில் சோதனை செய்து சான்று வாங்கி, தமிழக அரசு மூலம் டெங்குவை கட்டுப்படுத்தும் அதிகாரபூர்வ மருந்தாக நிலவேம்பு மற்றும் பப்பாளி இலைச் சாறு ஆகிய இரண்டையும் அறிவிக்கச் செய்ததும் எனக்கு மகிழ்ச்சியான ஒன்று.

இவைதவிர,சென்னை மாநகராட்சியில்  30 மழலையர் பள்ளிகள் மட்டுமே இருந்ததை அறிந்து, அதனை 200 என எண்ணிக்கை உயர்த்தியதும், மாநகராட்சி பள்ளிகளின் தரம்  உயர்த்தி அதிக மாணவர்கள் சேர்க்கையும் கொண்டு வந்தேன். நான் மேயர் பதவிக்கு வந்தபோது, 48 விளையாட்டுத் திடல்கள்  மட்டுமே இருந்தன.  அதனை 213 என எண்ணிக்கை உயர்த்தியதும் எனக்கு மனநிறைவை கொடுத்தவை.

மேலும் இந்திய அளவிலுள்ள மாநகராட்சி வரலாற்றில் மக்கள் நலனுக்காக  200க்கும் மேற்பட்ட புதிய திட்டங்களை கொண்டு வந்ததும் எனக்கு மனநிறைவை கொடுத்தவை.இவை அனைத்தையும்விட, கூவம் நதியை சீரமைப்பதற்காக, 3,833 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூவம் நதி சுற்றுச்சூழல் சீரமைப்புத் திட்டம் தொடங்க, நான் எடுத்துக்கொண்ட முயற்சியால் நடந்ததை, முக்கிய சாதனையாக கருதுகிறேன். இந்தத் திட்டம் முமுமையாக நிறைவேறும்போது, நமது கூவம் ஆறு, சிங்கப்பூர் நதி போன்று சுத்தமாக நிச்சயம் மாறும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு” என்றார் சென்னை பெருநகர முன்னாள் மேயர் சைதையார் அவர்கள்.