எழில் மிகுந்த எம்பிராய்டரி நகைகள்!

எழில் மிகுந்த எம்பிராய்டரி நகைகள்!

பண்டைய பாரம்பரியமும், இன்றய புதுமையும் கலந்தாலே அற்புதம்தான். அது போன்று உருவாகி வருகின்றன, எம்பிராய்டரி நகைகள்.

இன்றைய யூத்களை ஈர்க்கும் வகையில் டிரெண்டில் உள்ள நகை அமைப்புகளை கொண்டு உருவாகின்றன.

அதிலும், ஆடையை அணிகலன்களுடன் இணைத்து வடிவமைப்பது கலாசார ரீதியாக சிறப்பை அளிக்கிறது.  வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வரிசையில் துணிகளில் போடப்படும் விதவிதமான பாரம்பரிய எம்பிராய்டரி தையலை பயன்படுத்தி ‘எம்பிராய்டரி நகைகள்’ வடிவமைக்கப்படுகின்றன.

இந்த எம்பிராய்டரி நகைகள் பாரம்பரியம், மாடர்ன் மற்றும் டிரெண்டியான உடைகளுக்குப் பொருந்தும் வகையில் இருப்பதோடு இலகுவான எடையுடன் அணிவதற்கு சவுகரியமாக இருக்கும் வகையிலும் தயாரிக்கப்படுகின்றன.

–          யாழினி சோமு