வியர்வை பருவில் இருந்து  விடுபட ஈஸி வழி!

வியர்வை பருவில் இருந்து  விடுபட ஈஸி வழி!

வெயில்காலம் முடிந்தாலும், நம் நாட்டில்    அனல் அடிக்கும். வேலை, பள்ளி, கல்லூரிக்கு செல்ல என வெளியில் கிளம்பினால் நொந்து நூலாகித்தான் வருவோம்.

வெப்பத்தால், மக்கள் நெரிசலால், காற்றோட்டமில்லாமல் என நாளின் பெரும்பகுதி வியர்வையால் அவதியுறுகிறோம்.  உடல் சூடு அதிகமாவதால்,  அதை பாதுகாக்க வியர்வை சுரப்பிகள் அதிக அளவில் வியர்வை நீரைச் சுரந்து உடலை குளிர்விக்க முயல்கிறது.

வியர்வை சிலருக்கு நார்மலாக இருக்கும். சிலருக்கோ அதிக வியர்வை ஏற்படும். இதனால் உடலில் கற்றாழை வாடை, அரிப்பு, வேர்க்குரு, தோல் நோய்கள்  ஏற்படும்.

இதை சரி செய்ய அதிகளவு நீர் பருக வேண்டும். அதோடு  நன்னாரி, வெட்டிவேர் குடிநீர் , இளநீர், பதநீர் என குளிர்ச்சியானவற்றை அடிக்கடி பருக வேண்டும்.

தர்பூசணி, நுங்கு, வெள்ளரி போன்ற நீர்க்காய்களை எடுத்துக் கொள்வதால் உடல் குளிர்ச்சியடையும்.

உணவில் அதிக மசாலா, இறைச்சி உணவுகள், காரம், புளிப்பு, உப்பு போன்றவற்றை குறைக்க வியர்வை வராது.

ஆக, வியர்வை தொல்லையை ஒழிக்க சுவையான வழிகள் உள்ளன. மகிழ்ச்சியுடன் செய்து பாருங்கள். பலன் நிச்சயம்.

  • யாழினி சோமு