டிராகன்: திரைப்பட விமர்சனம்: கடிக்குதா கவருதா?

இயக்கிய கோமாளி ஹிட்… இயக்கி நடித்த லவ் டுடே சூப்பர் ஹிட் என்கிற தெம்புடன் பிரதீப்… ஓ மை கடவுளே என்ற அதிரடி ஹிட் படத்தை இயக்கிய அஸ்வத், பிரம்மாண்ட படைப்புகளை அளிக்கும் எ.ஜி.எஸ். என சிறப்பான கூட்டணி அமைந்து, எதிர்பார்ப்பை ஏற்படுத்திய டிராகன் திரைப்படம் வெளியாகி உள்ளது.
படம், கடிக்குதா, கவருதா… பார்ப்போம்.
சிறப்பாக படிக்கும் மாணவன் மெரிட்டில் இன்ஜினியரிங் காலேஜ் சேருகிறார். அங்கே அனுபமா ப்ரதீபை kாகாதலிக்கிறார்.. அது பிரேக் அப் ஆகிறது. இதனால் அடாவடி மாணவனாக மாறுகிறார். ஏகப்பட்ட அரியர்ஸ்.
பிறகு, காதலிக்கு முன்பு நன்றாக வாழ வேண்டும் என போலி சான்றிதழ் தயார் செய்து 3 லட்சம் சம்பளத்திற்கு வேலைக்கு செல்கிறார்.அதன் பின் ஓர் அதிரடி மாற்றம்… அது என்ன… அதைத் தொடர்ந்து என்னென்ன நடக்கிறது என்பதே மீதிக்கதை.
முந்தைய லவ் டுடே படம் போலவே, அதிரடி இளைஞனாக வலம் வருகிறார் ப்ரதீப். காதல் காட்சிகளிலும் சரி, பிரேக் அப் ஆனவுடன் சோகத்தை வெளிப்படுத்துவதிலும் சரி… சிறப்பாக உணர்வுகளை கடத்தி உள்ளார்.
இடைவேளை வரை, வந்து போகிற நாயகிதான்அனுபமா. ஆனால் இரண்டாம் பாதியில் சிறப்பானநடிப்பை அளித்து இருக்கிறார். குறிப்பாக, ப்ரதீப் அரியரை க்ளியர் செய்ய உதவி செய்யும் காட்சிகள் அருமை.
விஜே சித்து, ஹர்ஷத் கான் ஆரம்பித்து பேட் பேன் ரவி, ஜோ மைக்கல் என பல யூடியூப் பிரபலங்களும் நடிப்பில் அசத்துகிறார்கள்.புரபசர் மிஷ்கின், அப்பா மரியம் என அனைவருமே சிறப்பான நடிப்பை அளித்து இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு, இசை இரண்டும் படத்துக்கு பலம். “அனுபவத்துல சொல்றது எல்லாம் பூமர் ஆக தான் தெரியும்” போன்ற வசனங்கள் சிறப்பு.
அங்கங்கெ நெருடும் கெட்ட வார்த்தைகள், சில அதீத கிளாமர் காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்.
மொத்தத்தில் மீண்டும் சூப்பர் ஹிட் அடித்து இருக்கிறார்கள் பிரதீப் மற்றும் இயக்குநர் அஸ்வத்!
—