டாக்டர் சிவராஜ்க’பிக்காசோ’: சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் இணையும் பான் இண்டியா திரைப்படம்!
கன்னடத் திரையுலகின் மாஸ் நாயகன் டாக்டர் சிவராஜ்குமாரும், இளம் புயல் அபிஷன் ஜீவிந்தும் கைகோர்க்கும் புதிய அதிரடி சரவெடி திரைப்படம் ‘பிக்காசோ’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பொறி பறக்கும் வகையில் வெளியாகி இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது. ரிஷப் ஷெட்டி தனது கரங்களால் வெளியிட்டுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
பட்டாசுப் புகைக்கு நடுவே பாரம்பரிய வெள்ளை உடையில் சிவராஜ்குமாரும் அபிஷனும் கெத்தாக அமர்ந்திருக்கும் காட்சி, படத்தின் சுவாரஸ்யத்தை அள்ளிக் கொடுக்கிறது. கையில் வரைந்தது போன்ற மஞ்சள் நிற எழுத்துக்களில் மிளிரும் ‘பிக்காசோ’ தலைப்பே, படம் ரொம்பவே ஸ்பெஷல் என்பதை உரக்கச் சொல்கிறது.
இயக்குநர் கவுதம் சிவராமன் படைப்பில் உருவாவதால், வழக்கமான பாதையில் செல்லாமல் முற்றிலும் புதுமையான கொண்டாட்டமாக படம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. லியோன் ஜேம்ஸ் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கும் என்பது உறுதி. அழகிய நாயகியாக ஷிவானி நாகரம் இணைய, யோகலட்சுமி மற்றும் பாடகர் கானா வினோத் ஆகியோரின் பங்களிப்பு படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
டிராமா கம்பெனி தயாரிப்பில் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் வெளியாகி திரையை அசைக்கப்போகின்றன.

