ஜூன் முதல் தியேட்டர்களில் திருவிழா! ‘டபுள் ஆக்குபன்சி’ ஆட்டம் ஆரம்பம்!
காதல், காமெடி, கூடவே கொஞ்சம் ஃபேண்டஸி மேஜிக்! எல்லாத்தையும் ஒண்ணா கலந்து, ஒரு செம்ம எண்டர்டெய்னர் பேக்கேஜாக வராது ‘டபுள் ஆக்குபன்சி’. அவ்னி மூவிஸ் குஷ்பு சுந்தர் மற்றும் பென்ஸ் மீடியா ஏசிஎஸ் அருண் குமார் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படம், வரும் ஜூன் முதல் உலகமெங்கும் தியேட்டர்களில் ரிலீஸாக ரெடியாகிவிட்டது.
சென்னையில் நடந்த பிரம்மாண்ட ஆடியோ லாஞ்ச்ல ஒட்டுமொத்த படக்குழுவும் ஆஜராகி, படம் உருவான சுவாரஸ்யமான கதைகளை பகிர்ந்துக்கிட்டாங்க. அப்பவே படத்துக்கான எதிர்பார்ப்பு எகிறிடுச்சு!
அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி செதுக்கியுள்ள இந்த கதையில், சந்தோஷ் ஹீரோவாக மிரட்டியிருக்கார். சம்யுக்தா விஸ்வநாதன், ரேஷ்மா வெங்கடேஷ், வினோத் கிஷன் மூவரும் முக்கிய ரோல்களில் கலக்கியிருக்காங்க. இவர்களோடு விடிவி கணேஷ், பக்ஸ், விச்சு விஸ்வநாத், போஸ் வெங்கட், வினோதினி வைத்தியநாதன் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே சேர்ந்து காமெடி கலாட்டாவிற்கு கேரண்டி கொடுத்திருக்காங்க.
சாம் சி.எஸ்-ஸின் துள்ளலான இசை, சந்தகுமார் சக்கரவர்த்தியின் கலர்புல் ஒளிப்பதிவு என டெக்னிக்கல் பக்கமும் படம் பக்கா ஸ்ட்ராங்! தியேட்டருக்கு வர்ற ரசிகர்களுக்கு ஒரு புதுவிதமான, ஜாலியான சினிமா அனுபவத்தை கொடுக்க ‘டபுள் ஆக்குபன்சி’ டீம் பக்கா பிளானோடு வராங்க. ஜூன் முதல் தியேட்டர்கள்ல கொண்டாட்டம் தான்!

