ஜெயம் ரவி இயக்க விரும்பும் ஹீரோ யார் தெரியுமா?

ஜெயம் ரவி இயக்க விரும்பும் ஹீரோ யார் தெரியுமா?

அஹமத்  ஜெயம் ரவி – நயன்தாரா ஜோடியாக நடிக்கும் படம்  ‘இறைவன்’. ‘தனி ஒருவன்’ படத்துக்குப் பிறகு இவர்கள் மீண்டும் இணைந்துள்ளனர்.

இறைவன் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.  ஹரி கே.வேதாந்த் ஒளிப்பதிவு செய்ய, மணிகண்ட பாலாஜி எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்.

இப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர், ட்ரைலர் ஆகியவை வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றன.

இந்த நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு நேற்று (செப்.24) சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.இதில் ஜெயம் ரவி பேசும்போது படம் குறித்தும், தனது அண்ணன் ராஜா குறித்தும் பேசினார்.  “இந்த படம் பயங்கர டெரராக இருக்கும். ஆகவே குழந்தைகளை அழைத்து வராதீர்கள்” என்று வேண்டுகோளும் வைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “தான் பார்த்த முதல் நடிகன் ரவிதான் என விஜய் சேதுபதி இங்கே பேசினார். ஆனால், நான் இயக்க வேண்டும் என நினைத்த முதல் ஹீரோ விஜய்சேதுபதிதான். சீக்கிரம் எனக்கு கால்ஷீட் கொடுங்கள்” என்று கூறினார்.

இறைவன் திரைப்படம் வரும் செப்.28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Related Posts