முதலமைச்சரின் வெள்ள நிவாரண பணி! பாட்டாவே படிச்ச சீனு ராமசாமி!

முதலமைச்சரின் வெள்ள நிவாரண பணி! பாட்டாவே படிச்ச சீனு ராமசாமி!

திரைப்பட இயக்குநர் சீனி ராமசாமி, “மு.க.ஸ்டாலினின் குடைக்காட்சி தான் முதல் வானிலை அறிக்கை!” என்று தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார்.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் வடதமிழக மாவட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டது.

ஆனால் உடனுக்குடன் நீரை அப்புறப்படுத்தும் பணி நடக்கிறது. கூடுதல் பாதிப்பு உள்ள பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவக்கப்பட்டு உள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், சென்னை மேயர் அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள் சுற்றிச் சுழன்று பணி செய்து வருகின்றனர்.

கடந்த காலங்களைப் போல மழை பாதிப்பு பல இடங்களில் பெரிய அளவில் இல்லை. உதாரணமாக மடிப்பாக்கம் பகுதியில், வடிகால் வசதி சிறப்பாக செய்யப்பட்டது. அதே போல பெரும்பாலான இடங்களில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டன. ஆகவே பாதிப்பு இல்லை.

இந்நிலையில் திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில், ” கடந்த 30 ஆண்டுகளில் சென்னையில் மழை என்றாலே மற்ற மாவட்டங்களுக்கு அது பற்றிய செய்தியில் அன்றைய நாளிதழ்களில் வெள்ள நிவாரணப் பணிக்காக நீருக்கு நடுவே நடந்து செல்லும் இன்றைய மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களின் புகைப்படமும் இருக்கும்.அந்தக் குடைக்காட்சி தான் முதல் வானிலை அறிக்கை எங்கள் கிராமங்களுக்கு அது இன்றும் தொடர்கிறது.

மேலும் இன்று மாண்புமிகு துணை முதல்வர் @Udhaystalin அவர்களின் நிவாரணப் பணி செய்திகள் பார்த்தேன்.மகிழ்ச்சி. சிறப்பாக பணி தொடர வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

இது குறித்து சீனு ராமசாமியிடம் பேசினோம்.

அவர், “யாரையும் புகழ வேண்டும் என்று சொல்லவில்லை.. அரசியல் சார்பற்ற கலைஞன்.. என் மனதில் பட்டதைப் பதிவிட்டேன்.

ஜப்பானில் நில நடுக்கம் போல, சென்னையில், செப்டம்பர் – டிசம்பர் மாதங்களில் மழை – வெள்ளம் தவிர்க்க முடியாததாகிவிட்டது. இதை எப்படி சமாளிக்கிறோம் என்பதுதான் முக்கியம்.

அந்த வகையில், தற்போதைய மழையின் போது வெள்ள பாதிப்பு வெகுவாகக் குறைந்து இருக்கிறது. இதற்குக் காரணம், கடந்த கால அனுபவங்களில் இருந்து சென்னை மாநகராட்சி பெற்று இருக்கும் அனுபவம்.

தேங்கும் தண்ணீரை உடனுக்குடன் வெளியேற்றுவது, தூய்மப்பணியாளர்களின் உழைப்பு, நிர்கவாக் திறன் அனைத்தும் காரணம்.இதற்காக சென்னை மாநகராட்சி நிர்வாகம், இந்திய ஆட்சி பணி அதிகாரிகள், அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்.

இந்த நிலையில் இன்னொரு விசயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன்.

இரு வருடங்களுக்கு முன் நான் எழுதி வெளியிட்ட, ‘ புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை’ கவிதைத் தொகுப்பிலேயே வெள்ள நேரத்தில் மு.க. ஸ்டாலின் அவர்களின் குடைக்காட்சியை நான் பதிவு செய்து இருக்கிறேன்.‘மழை குடிக்கும் நகரம்’ என்ற கவிதையில், சென்னை நகரத்தின் மழைக்காட்சிகள் ஒவ்வொன்றாக விவரிப்பேன்.

‘நகரத்தின் ஏதோ ஒரு இடத்தில்
மேயர் மு.க.ஸ்டாலின்
நீரில் நனைந்த ஓவியம் போல
குடையுடன் நிற்கும் காட்சி
தந்தியில் வந்திருக்கும்..’

– என்று குறிப்பிட்டு இருப்பேன்” என்றார் சீனு ராமசாமி.

Related Posts