அதிரடியாக ஆக்கிரமிப்பை அகற்றிய சி.பி.எம். தொண்டர்கள்! 50 ஏக்கருக்கு நீர்ப்பாசணம்!

நீர் வழி ஆக்கிரமிப்பை, தங்கள் சங்கத்தின் மூலம் அகற்றி, 50 ஏக்கர் நிலத்துக்கு நீர்ப்பாசன வசதியை செய்து கொடுத்து, அப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்டுக்கொடுத்திருக்கின்றனர், சி.பி.எம். கட்சியின் விவசாய பிரிவான, தமிழ்நாடு விவசாய சங்கத்தினர்.

தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட வன்னியம்பட்டி கிராமத்தில் உள்ளது பஞ்சனூரணி ஏரி. இதன் மூலம், 50 ஏக்கர் நிலத்துக்கு நீர்ப்பசண வசதி கிடைக்கும்.

ஆனால் இந்த குளத்தின் சில பகுதிகள் மற்றும் நீர்வழிப்பாதைகளை சில தனி நபா்கள் ஆக்கிரமித்து அடைத்து வைத்துவிட்டனர்.

இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு, ஏராளமான விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர்.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்…

இது குறித்து கீழ்நிலை அரசு அலுவலர்களிடம் இருந்து மாவட்ட ஆட்சியர் வரை கடந்த பல ஆண்டுகளாக, புகார் மேல் புகார் அளித்தும் பலனில்லை.
ஆக்கரமிப்பாளர்களின் செல்வாக்கு அப்படி!

இந்நிலையில்தான், சி.பி.எம். கட்சியின் விவசாயிகள் பிரிவான, ‘தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்’ இப்பிரச்சினையை கையிலெடுத்தது.

இது குறித்து, தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தஞ்சை மாவட்ட தலைவர் கண்ணன் கூறுகையில், “நாங்களும், அரசு அலுவலர்களிடம் தொடர்ந்து மனு அளித்து பலனின்றி இருந்தது. இதையடுத்து எங்கள் சங்கத்தின் வன்னியம்பட்டி கிளை சார்பில், ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி ஆகஸ்ட் 19 -ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என அறிவித்தோம்.

இதையடுத்து முந்தைய நாள் – ஆகஸ்ட் 18ம் தேதி – பூதலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, ‘பதினைந்து நாள்களுக்குள் ஆக்கிரமிப்பை அகற்றி பாசன வாய்க்கால் அமைக்கப்படும்!’ என அலுவலர்கள் உறுதி அளித்தனர்.

ஆனால், இரண்டு மாதங்கள் கடந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது இப்பகுதியில் மழை பெய்துவருகிறது. ஆனால், நீர் வரத்துப் பாதை அடைத்து வைக்கப்பட்டு உள்ளதால், பஞ்சனூரணி ஏரிக்கு தண்ணீா் வரவில்லை. இதனால், சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனா்.

இனியும் பொறுப்பதில்லை என்கிற முடிவோடு, தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் முடிவெடுத்தோம்!” என்றார்.

கடந்த செவ்வாய்க் கிழமை அன்று, இச்சங்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன்,

வந்தது தண்ணீர்…

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலா் எஸ். தமிழ்ச்செல்வி, சி.பி.எம். கட்சியின் பூதலூா் தெற்கு ஒன்றியச் செயலா் சி. பாஸ்கா், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியத் தலைவா் கே. தமிழரசன், விவசாய தொழிலாளா்கள் சங்கத்தின் ஒன்றிய தலைவா் எம். காமராஜ் உள்ளிட்டோர், கடந்த செவ்வாய்க்கிழமை அணிவகுத்துச் சென்றனர்.

நீர்வழிப்பாதையில் சுமார் ஒரு கி.மீ. தூரத்துக்கு இருந்த ஆக்கிரமிப்பை அகற்றினர். மேலும், ஒரு கி.மீ. தொலைவுக்கு தூர் வாரினர்.

இதன் மூலம், பல ஆண்டுகளுக்குப் பிறகு, தடையின்றி ஏரிக்கு தண்ணீர் வந்தது.

இதனால் மகிழ்ச்சியில் திளைக்கும் இப்பகுதி விவசாயிகள், “எத்தனையோ வருடங்களாக, இந்த ஆக்கிரமிப்பை அகற்ற முயற்சி செய்து முடியாமல் தவித்தோம். அரசு அதிகாரிகளிடம் சொல்லி பயனில்லாத நிலை.
இந்த நிலையில்தான், சி.பி.எம். கட்சியின், தமழ்நாடு விவசாய சங்கத்தின் எங்களுக்காக போராடியதுடன், களத்துக்கும் வந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாழ்வுக்கு வழிகாட்டி உள்ளனர்!” என்றனர் நெகிழ்ச்சியாக.

Related Posts