இந்தியன் 2 படத்துக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு!

இந்தியன் 2 படத்துக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு!

இந்தியன் 2 படத்திற்கு தடை விதிக்க மதுரை மாவட்டம் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்க, கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் நாளை (ஜூலை 12)  உலகம் முழுவதும் வெளியாகிறது.

இதற்கிடையே மதுரையை சேர்ந்த வர்மக்கலை ஆசான் ராஜேந்திரன் இந்தியன் 2 படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி மதுரை மாவட்ட 4 வது உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அவர், தனது மனுவில் தனது அனுமதி இன்றி வர்மக்கலை முத்திரை பயன்படுத்தப்பட்டதாகவும் ஆகவே படத்தை தடை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் இன்று நீதிமன்றம் இந்தியன் 2 படத்திற்கு தடை விதிக்க முடியாது என தீர்ப்பளித்து உள்ளது.

 

Related Posts