கொரோனா வைரஸுக்கு மருந்து: சாதித்த சித்த மருத்துவர் திருத்தணிகாசலம்!
உலகை அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் தாக்குதலிருந்து தற்காத்துக் கொள்ள மருந்து கண்டுபிடித்துவிட்டதாக, சித்த மருத்துவர் கா.திருத்தணிகாசலம் அறிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேடு அருகே இரத்னா சித்தமருத்துவமனை இயங்கிவருகிறது. சித்தர் என்று மக்களால் அழைக்கப்படும் டாக்டர் க. திருத்தணிகாசலம் நம்மிடம் கொரோனா வைரஸ் பற்றி பகிர்ந்து கொண்டதாவது:
தற்போது சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் இதைப் பற்றி உலகநாடுகள் எல்லம் அச்சத்தில் உள்ளன. அது எந்த மாதிரியான வைரஸ் எங்கிருந்து பரவிவருகிறது என்று குழப்பத்தில் தவித்து வருகின்றனர். இது ஒரு ஒ ளிவட்ட வைரஸ் ஆகும்.
உலகில் மலேசியா, சிங்கப்பூர், வியட்நாம் துபாய் ஆகிய நாடுகளில் பரவி மக்களை அச்சுருத்தி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு ஆராச்சிகளை மேற்
கொண்டுவருகின்றன.
இந்த பதட்டமான சூழ்நிலையில் எங்கள் இரத்னா சித்த மருத்துவமனை ஆராய்ச்சி மூலம் கொரோனா வைரஸையை குணமாக்கும் மருந்தை தமிழகத்தில் எங்கள் மருத்துவமனை ஆராச்சியின் மூலம் கண்டறிந்துள்ளோம்.
ஏற்கனவே சிக்கன்குனியா மர்ம காய்ச்சலால் பலபேர் பாதிக்கப்பட்டு 15 நாள்களுக்கும் மேல் கை, கால், வலியுடன் அவதி பட்டனர். இந்த நோய் பரவலாக வந்தபோது முதன் முதலில் நிலவேம்பு குடிநீரை அருந்தினால் நோய் கட்டுப்படும் என போது மக்களுக்கும், அரசுக்கும் தெரிவித்தது இதே இரத்னா சித்தமருத்துவமனை தான்.
அதைத் தொடர்ந்து டெங்கு காய்ச்சல் ஏற்பட்ட போது சுமார் 550 பேருக்கு சித்த மருத்துவ சிகிச்சை மூலம் மருந்துகள் கொடுக்கப்பட்டு 100% நோயை குணமாக்கியுள்ளோம்.
இந்நிலையில் இரத்னா சித்த மருத்துவமனை தங்களின் ஆராச்சிமூலம் கொரோனா வைரஸையை குணமாக்கும் மருந்தை தமிழகத்தில் எங்கள் மருத்துவமனை ஆராச்சியின் மூலம் கண்டறிந்துள்ளோம். இந்த மருந்தை உலகசுகாதார நிறுவனம் மற்றும் பாதிக்கப்பட்ட நாடுகள் அழைப்பு விடுத்தால் சிகிச்சை அளிக்கத் தயாராக இருக்கிறோம் என டாக்டர் க. திருத்தணிகாசலம் தெரிவித்தார்.