கொரோனாவைக் கட்டுப்படுத்தும் மூலிகைத் தேநீர்! வீட்டில் தயாரிப்பது எப்படி? மருத்துவர் வீரபாபு விளக்கம்

சென்னை; உலகை அச்சுருத்து கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை  எந்து மருந்துகளும்  கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தியாவில கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த கபசுர குடிநீர் , மூலிகை தேநீர் கொடுக்கலாம் என்று பாரம்பரிய மருத்துவர்கள் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா நோயாளிகளை குணப்படுத்தி வரும் மருத்துவர் வீரபாபு.  மூலிகை தேநீரை தொடர்ந்து பருகி  வந்தாள் கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும் என்றும் பாரம்பரிய மருத்துவர்  வீரபாபு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சித்த மருத்துவர்   வீரபாபு கூறுகையில், “கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாரம்பரிய முறையிலான சிகிச்சைகளும் மூலிகை உணவுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.  இந்த சிகிச்சையில் யாரும் உயிரிழக்கவில்லை. பாரம்பரிய சித்த மருத்துவத்தில் இதுவரை  400க்கும் மேட்பட்டவர்கள் குணமடைந்துள்ளனர்.  கொரோனா நோய் தொற்று இருப்பவர்கள்  தொடர்ந்து ’மூலிகைத் தேனீர்’ எடுத்துக் கொண்டால் அவர்கள் நோய் தொற்றிலிருந்து விரைவில் மீண்டு வர பெரிதும் உதவிசெய்யும்.

கொரோனா போன்ற வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்கு சில மூலிகை பானங்கள் உதவுகின்றன. அந்த வகையில் கபசுர குடிநீருடன் மூலிகை தேநீரை பருகி வருதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இந்த மூலிகை தேநீரை வீட்டிலேயே தயாரித்துக் கொள்வது எப்படி?

மூலிகை தேநீர் தயாரிக்கும் முறை; 

சுக்கு  – 100 கிராம்.

அதிமதுரம் – 100 கிராம்.

சித்தரத்தை – 30 கிராம்.

கடுக்காய் தோல்-  30 கிராம்,

மஞ்சள் – 10 கிராம்,

திப்பிலி – 5 கிராம்.

ஒமம் – 5 கிராம்,

கிராம்பு – 5 கிராம்,

மிளகு – 5 கிராம்.

இவை அனைத்தையும் பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். 400 மில்லி லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் மூலிகை பொடியை கலந்து 100 மில்லியாக சுண்டும் வரை கொதிக்க வைக்க வேண்டும்

பின்னர் அதனை ஆறவைத்து பருகலாம். இந்த மூலிகை தேநீரை பெரியவர்கள் 100 மில்லியும். 10 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் 60 மில்லியும், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 30 மில்லியும் தொடர்ந்து பருகுதல் அவசியம்.

மூலிகை தேநீரைக் கொதிக்க வைக்கும் போது கற்பூரவல்லி, புதினா, இன்னும் பலன் கிடைக்கும் என்றார். நாட்டுக்கரை சேர்த்தும்  இந்த தேநீரை பருகலாம்” இவ்வாறு  மருத்துவர் வீரபாபு கூறினார்.

எஸ் யாழினி

 

Related Posts