’’கொரோனா’’ விளையாட்டு வைரலாகும் வீடியோ…!

கொரோனா வைரஸ் தீவிரத்தின் காரணமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. மனித உயிர்களை காப்பதற்கு 144 தடை உத்தரவு, மக்களிடம் இருந்து மக்களைப் பிரித்து தனிமைப்படுத்தி நோய் பரப்பை தடுப்பது எனத் தொடங்கி தனது சேவையை தொய்வில்லாமல் செய்துவருகிறது.

இந்தப் போர்கால நடவடிக்கைகளில் பல போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டு, விமான சேவைகள் பெரும்பாலும் நிறுத்தப்பட்ட சூழ்நிலையில் ஒரு விமான நிலையத்தில் கூட்டங்கள் எதுவும் இல்லாததால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் கண்ணாமூச்சி விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.