“மனதார வாழ்த்துங்கள்!” : ஐஸ்வர்யா அப்பா, இயக்குநர் ஷங்கர்!

திரைப்பட இயக்குநர் ஷங்கருக்கு ஐஸ்வர்யா ஷங்கர், அதிதி ஷங்கர் என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் மருத்துவம் படித்து இருந்தாலும் சினிமா மீது இருந்த ஆர்வத்தால் விருமன் படத்தின் மூலம் நடிகையானார். இந்த படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்தார். இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்ததைத் தொடர்ந்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு, தன்னிடம் உதவி இயக்குநராக இருந்த தருண் கார்த்திகேயன் மருமகனாக்கி உள்ளார் ஷங்கர். இவர்களின் நிச்சயதார்த்தம் பிப்ரவரி மாதம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது.
இதையடுத்து திங்கட் கிழமை தருண் ஐஸ்வர்யா திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், சீயான் விக்ரம், சூர்யா, கார்த்திக், மணிரத்னம்,சுஹாசினி, நயன்தாரா, விக்னேஷ் சிவன் என ஒட்டுமொத்த திரைப்பிரபலங்களும் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.இதையடுத்து நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி, ராம்சரண், சிரஞ்ஜீவி தனது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்நிலையில், இயக்குர் ஷங்கர் தனது மகள், மருமகன் மற்றும் சம்மந்தியுடன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய தருண் கார்த்திகேயன் “நான் அசிஸ்டன்ட் டைரக்டர் இல்லை, சாஃப்ட்வேர் இன்ஜினியராக அமெரிக்காவில் பணியாற்றி வருகிறேன்” என்றார்.
இதையடுத்து பேசிய ஷங்கர், “என் அழைப்பை ஏற்று இங்கு வந்த அனைவருக்கும் நன்றி, என் 31 வருட சினிமா பயணத்தில் உங்களுடைய பங்கு மிக முக்கியமான ஒன்று என நான் நினைக்கிறேன். அனைவரும் மனதார இந்த மணமக்களை வாழ்ந்த வேண்டும்” என்றும் என்றார்.
தருண் கார்த்திகேயன், உதவி இயக்குனர் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவர் சாஃப்ட்வேர் இன்ஜினியர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இந்த தம்பதிகளுக்கு இணையத்தில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.