மீம் கலைஞராக நடிக்கும் ‘சாம்பியன்’ விஷ்வா.
சென்னை; சுசீந்திரன் இயக்கத்தில் கால்பந்து வீரராக சாம்பியன் படத்தின் மூலம் அறிமுகமானவர் விஷ்வா. தற்போது இன்னும் பெயரிடம்படாத படத்தில் ‘மீம்’ கலைஞன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். கே.எச் பிக்சர்ஸ் சார்பில் கோமளா, ஹரி பாஸ்கரன் தயாரிக்கிறார்கள் இந்தப்படத்தை பாரதி பாலா இயக்குகிறார். மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு நடைப்பெற்று வருகிறது.இந்தப் படம்பற்றி விஷ்வா கூறும்போது “சாம்பியன்” படத்தில் என் நடிப்பை பார்த்து விட்டு ஹரி பாஸ்கரன் சார் என்னை பாராட்டினார். அதன் பின், டைரக்டர் பாரதி பாலா கதையை சொல்லி அதற்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று சொல்லி என்னை தேர்ந்தெடுத்தார். இப்படம் குற்றத்தைக் கண்டுபிடிக்கும் திரில்லர் படமாக இளைஞர்களை கவரும் படியாக இருக்கும்.
நான் அறிமுகமான முதல் படத்தில் கால்பந்து வீரராக பயிற்சி எடுத்தேன். இப்போது ‘மீம்’ கலைஞனாக பயிற்சி எடுத்து வருகிறேன். வினோத் என்கிற ‘மீம்’ கலைஞரோடு பயிற்சி எடுத்து வருகிறேன். அவரிடம் ‘மீம்’ பற்றி நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன்,என்றார்.