‘கேரம்’ கீர்த்தனா சாதனை! பா.ரஞ்சித் பாராட்டு!

‘கேரம்’ கீர்த்தனா சாதனை! பா.ரஞ்சித் பாராட்டு!

ஏழாம் உலகக்கோப்பை கேரம் போட்டி மாலத்தீவின் தலைநகர் மாலே மாநகரில் நடைபெற்றது.

இந்தியா, இலங்கை, மாலத்தீவு, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் என மொத்தம் 17 நாடுகளிலிருந்து 150-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இத்தொடரில் பங்கேற்றனர்.

இதில் ஆடவர் மற்றும் மகளிர் இரு பிரிவிலும் குழு, இரட்டையர், ஒற்றையர் என அனைத்திலும் இந்தியா தங்கப் பதக்கம் வென்றிருக்கிறது.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பிரசாந்த் தங்கப் பதக்கம் வென்றார். ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீனிவாஸ் – அபிஜித் இணை தங்கப் பதக்கம் வென்றது. குழு போட்டியிலும் இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கம் வென்றது.

மகளிர் ஒற்றையர், இரட்டையர் மற்றும் அணி என மூன்று பிரிவுகளிலும் வடசென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த கீர்த்தனா தங்கப் பதக்கங்களை வென்று உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

இன்று அவரை நேரில் சந்தித்து நீலம் பண்பாட்டு மையம்  நிறுவனர் , இயக்குனர் பா. இரஞ்சித் அவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற கேரம் உலகக் கோப்பையில் மகளிர் 3 பிரிவிலும் தங்கப் பதக்கம் வென்ற காசிமாவுக்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts