சந்தானம்  நடிக்கும் ‘பிஸ்கோத்’ தீபாவளி அன்று வெளியீடு!

இயக்குநர் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் ‘பிஸ்கோத்’ படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இப்படத்தில் சந்தானம் ராஜபார்ட் வேட மேற்று நடித்திருக்கிறார்.  சந்தானம் தோன்றும் ராஜபார்ட்காட்சிகள் படத்தில் அரைமணிநேரம் இடம்பெறு கின்றன.
அந்தக் காட்சிகள் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் கலை இயக்குநர் ராஜ்குமார் வடிவமைத்த அரங்குகளில்  ராஜாவாக சந்தானம் நடித்துள்ளார்.

படம் பற்றி இயக்குநர் ஆர்.கண்ணன் பேசும்போது,
” படத்தில் ஒரு பிஸ்கட் ஃபேக்டரி முக்கியமான பாத்திரம் போல் வருகிறது .அதனால்தான் படத்துக்குப் ‘பிஸ்கோத்’ என்று பெயர் வைத்தோம்.  சந்தானத்தின் வேறு சில பரிமாணங்களை இதில் வெளிப்படுத்தியிருக்கிறோம்.வடிவேலுவுக்கு எப்படி ‘இம்சை அரசன் ‘அமைந்ததோ அப்படி சந்தானத்துக்கு ‘பிஸ்கோத்’ படம் அமையும். அது போல் பேசப்படும் படமாகவும் இருக்கும் என்றனர்.

இப்படத்தில் இந்த ராஜா காட்சிகள் 30 நிமிடங்கள் வரும்.இதற்காக அந்தக் காலத்து ஆதாரங்களை எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு கலை இயக்குநர் ராஜ்குமார் அரங்கம் அமைத்தார். இதற்கான உடைகளுக்காக மிகவும் சிரமப்பட்டு உடை அலங்கார நிபுணர் பிரியா உடைகளை வடிவமைத்துக்கொடுத்தார். இதற்கான காட்சிகளில் துணை நடிகர்கள் 500 பேர் நடித்தார்கள் அவ்வளவு பேருக்கும் உடைகள் தயாரிக்கப்பட்டடது.

பெயிண்டிங் போன்றவற்றை வைத்து ஓவியங்கள் போல் ஒளி அமைப்பு செய்து ‘ 96’ படத்தின்  ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்து பிரமாதப்படுத்தியிருக்கிறார்.படத்தில் பதினெட்டாம் நூற்றாண்டுக் காலக்கட்டத்தில் வரும் காட்சிகளுக்குத்தான்  இப்படி ராஜபார்ட் வேடமும் அரங்கங்களும் அமைக்கப்பட்டன. இன்னொரு பகுதியாக எண்பதுகளில் இடம்பெறும் காட்சிகள் வரும். மூன்றாவது பகுதியாக சமகாலத்து காட்சிகள் அதாவது இக்கால 2020க்கான காட்சிகள் அமைந்திருக்கும். இம்மூன்று காலகட்டத்துக்கும் என்ன தொடர்பு என்பது படம் பார்த்தால் புரியும் .மொத்தத்தில் முழுக்க முழுக்க சிரிக்க வைக்கும் படமாக இது இருக்கும் என்றார்.

சந்தானம் ரசிகர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பிடித்த படமாக ‘பிஸ்கோத்’   இருக்கும். கொரோனா முடக்கத்துக்குப் பிறகு அனைவருக்கும் ஒரு மன அழுத்தம் இருக்கிறது.அந்த அழுத்தங்களில் இருந்து விடுபெறுவதற்கு   கலகலப்பான காமெடி படமாக ‘பிஸ்கோத்’ இருக்கும் என்றார்.

சந்தானத்துடன் ஏற்கெனவே ‘A1’  படத்தில் நாயகியாக  நடித்த தாரா  அலிஷா பெர்ரி ஒரு நாயகியாகவும்  மிஸ் கர்நாடகா விருதுபெற்ற ஸ்வாதி முப்பாலா  இன்னொரு நாயகியாகவும்  யும் நடித்துள்ளார்கள்

 அதுமட்டுமல்ல ஆனந்தராஜ், மசாலா பிக்ஸ் சார்பில், MKRP புரொடக்ஷன்ஸ்  உடன் இணைந்து நான் இந்த படத்தைத் தயாரித்து இயக்கி இருக்கிறேன்.  ட்ரைடண்ட் ஆர்ட்ஸ்  ஆர். ரவீந்திரன் இந்தப் படத்தை வெளியிடுகிறார் .  தீபாவளிக்குப் பலகாரங்களுடன் இந்த ‘பிஸ்கோத்’தும் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-யாழினி சோமு

Related Posts