பிக்பாஸ் புரமோல வர சீனே காட்ட மாட்டுறாங்க… புகார் கூறும் ரசிகர்கள்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி இந்த மாதம் அக்டோபர் 4ஆம் தொடங்கியது. கிட்டதட்ட தமிழகத்தில் பார்க்கதா வீடுகள் மிகக் குறைவு என்ற அளவுக்கு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது பிக் பாஸ்.
விஜய் டி.வி தினமும் ரசிகர்களுக்கு பிக் பாஸ் பிரமோ 4 காட்டப்படுகிறது. ஆனால், நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கும் ரசிகர்களுக்கு ஏமாற்றமே ஏற்படுகிறது. புரமோவில் காட்டும் காட்சிகள் வராமல் வேற காட்சிகள் வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
ரசிகர்களை ஹாட் ஸ்டார் பார்க்க வைப்பதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒரு மணி நேரம் மட்டுமே ஒளிபரப்புகின்றனர். ஆனால், ஹாட் ஸ்டாரில் 1 மணி நேரம் 43 நிமிடங்களுக்கு காட்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன என குற்றசாட்டு எழுந்துள்ளது.
ஹாட்ஸ்டாரில் தான் அன்றைய பிக் பாஸ் எபிசோடின் மீதி பாதியான 40 நிமிட காட்சிகளை பார்க்க முடிகிறது. பிரமோவில் காட்டும் சீனே இரவு நிகழ்ச்சியில் பார்க்க முடியவில்லை என புகார் எழுந்துள்ளது. ரசிகர்கள் பெரிது எதிர்பார்த்த அனிதா புரமோவான கேமரா முன்பு நின்று கொண்டு சுரேஷ் சக்கரவர்த்தியிடம் சண்டை போடும் காட்சி காணவில்லை.’ என கலாய்த்து சமூக வலைதளத்தில் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். விஜய் டிவி இன்றாவது ரசிகர்களை ஏமாற்றாமல் இருக்க வேண்டும்.
-யாழினி சோமு