பிக் பாஸ் அனிதா சம்பத்தின் தந்தை ஆ.சி சம்பத் மாரடைப்பால் உயிரிழந்தார்..!
சென்னை; விஜாய் டிவி பிக் பாஸ் 4 வீட்டில் போட்டியாளராக வந்தவர் அனிதா சம்பத். சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்து வந்த அவர். தனது அடுத்த கட்ட பயணமாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்தார். செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகம் ஆனவர். பின் இந்த நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிக் பாஸ் அனிதா சம்பத் ஆனார்.
இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் தனது தந்தையை பற்றி அவர் ஒரு எழுத்தாளர் என்று நெகிழ்ச்சியுடம் கூறியிருந்தார் அனிதா. தான் கடந்த வந்த பாதை, தான் சந்தித்த சவால்கள் என தன் மனம் திறந்து பகிர்திருப்பார் அனிதா.
இந்த நிகழ்ச்சியில் இருந்து ஞாயிற்று கிழமை வெளியேற்றப்பட்டார் அனிதா சம்பத். அவர் வெளிவந்த நேரம் அவருக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அவரது தந்தை எழுதாளர் ஆர்.சி. சம்பத் இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
மூத்த பத்திரிக்கையாளர், எழுத்தாளர் ஆர்.சி.சம்பத் வேலைகாரணமாக பெங்களூர் சென்றிருந்த நிலையில் இன்று அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரழந்தார். இந்த செய்தி பத்திரிக்கைத்துறை மற்றும் எழத்தாளர், மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

