பாரதவர்ஷா: கோபிசந்தின் மிரட்டலான வரலாற்றுப் பயணம்!

பாரதவர்ஷா: கோபிசந்தின் மிரட்டலான வரலாற்றுப் பயணம்!

மாச்சோ ஸ்டார் டி. கோபிசந்தின் நடிப்பில், இயக்குநர் சங்கல்ப் ரெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்டமான வரலாற்று ஆக்ஷன் படம் ‘பாரதவர்ஷா’. ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்க, பவன் குமார் வழங்கும் இந்தப் படம், இந்திய வரலாற்றின் அறியப்படாத ஒரு பக்கத்தைப் பேசுகிறது.

சமீபத்தில் காஷ்மீரில் படமாக்கப்பட்ட ‘வீர ஜெயதீரா’ பாடல், ஆஸ்கர் விருது பெற்ற பாடலாசிரியர் சந்திரபோஸின் வரிகளிலும், அனுதீப் தேவின் இசையிலும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. நீண்ட தாடி, கம்பீரமான போர்வீரன் தோற்றத்தில் கோபிசந்த் மிரட்டியுள்ள இந்தத் திரைப்படம், தொழில்நுட்ப நேர்த்தியுடனும், உணர்வுப்பூர்வமான காட்சியமைப்புகளுடனும் உருவாகி வருகிறது.

ரிது வர்மா கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படைப்பு, கோபிசந்தின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லாக அமையும் என்பதில் சந்தேகமில்லை!

Related Posts