கல்லூரி மாணவராக மாறிய ஜி.வி. பிரகாஷ்..!
திரைத்துறையில் இசையால் நுழைந்து நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவரது நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது. இதில் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் வர்ஷா பொல்லம்மா ஜோடியாக நடிக்கும் புதிய படம் உருவாகிவருகிறது.
இந்த படத்தை, ‘டிஜி பிலிம் கம்பெனி’ என்ற புதிய நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
ஜிவி பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா இவர்களுடன் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குநரான கவுதம் வாசுதேவ் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் இவருடைய நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஜி.வி.பிரகாசுடன் கவுதம் வாசுதேவ் மேனன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல்முறை. இவர்களுடன் வாகை சந்திரசேகர், அறிமுக நாயகன் குணா மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தில் இசை ஜி.வி.பிரகாஷ்
ஒளிப்பதிவு விஷ்ணு ரங்கசாமி
படத்தொகுப்பு எஸ். இளையராஜா
இப்படத்தில் கல்லூரி மாணவராக ஜி.வி.பிரகாஷ். ஒரு மாணவனுக்கு கல்லூரிக்கு வெளியே நடக்கும் இன்னல்களை ஆக்ஷன், திரில்லர் கலந்து திரைக்கதையாக உருவாக்கி வருகிறார்கள்.
இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள். இறுதி கட்ட படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.