உச்சாகத்தை ஏற்படுத்திய ‘’RRR’’ படத்தின் கொமரம் பீம் டீஸர் !
தென் இந்தியாவின் பிரபல நடிகர் ராம் சரண். ஆர்ஆர்ஆர் படத்தில் அறிமுக உரை வெளியாகிறது அதில் கொமரம் பீம் குரலாக ராம் சரண்.
அறிமுகம் உரை;
அவன் எதிரே நின்னா கடல் புயலே அடங்கும்..
பேரச் சொன்னா சிகரத்துக்கே தொடை நடுங்கும்..
அவன் இதயத்துடிப்பு கொடியோட படபடப்பு..
அவனோட திமிரு இருட்ட வேட்டையாடுற கதிர்
பூமியோட தாய்ப்பால் குடிச்சு வளர்ந்தவன்
புரட்சியாய் எழுந்தவன்..
என் தம்பி
காட்டுக் கரும்புலி- கொமரம் பீம்…
உச்சாகத்தை ஏற்படுத்தும் இந்த உரை ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ‘RRR’ படத்தில்அல்லூரி சீதாராம ராஜூவாக ராம் சரண் நடிக்கிறார். மேலும் தெலுங்கு தேசத்தின் போராட்ட வீரர் சீதாராம ராஜூ வாக ஜூனியர் என்டிஆர் இருக்கிறார்.ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர்.
கொமரம் பீம், தெலுங்கானாவின் வீரர். இவர் நிசாம் மன்னர்களுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியவர்.
இந்த இரண்டு வீரர்களின் வாழ்க்கை தான் இப்படத்தின் கதை. ராம் சரண் அல்லூரி சீதாராம ராஜூவாகவும், என்டிஆர் கொமரம் பீமாவாகும் நடிக்கின்றனர். ராம் சரணின் பிறந்தநாளையொட்டி கடந்த மார்ச் மாதம் அல்லூரி சீதாராம ராஜூவின் டீஸர் வெளியிடப்பட்டது. அதற்கு ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்தது.
அந்த வகையில் தற்போது RRR குழுவினர், என்டிஆரின் கொமரம் பீம் டீஸரை வெளியிட்டுள்ளனர். ராம் சரணின் குரலில் அறிமுக உரை வெளியாகிறது. இத்திரைப்படம், தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளில் வெளியிடப்படுவதால் ராம் சரண் குரலிலேயே அனைத்து மொழிகளிலும் அறிமுக உரை வெளியாகிறது.அனைத்து மொழிகளிலும் அறிமுக உரை வெளியாகிறது.ஆலியா பட், சமுத்திரகனி, அஜய் தேவ்கன், பிரிட்டிஷ் நடிகை ஒலிவியா மோரிஸ் இன்னும் பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.
படத்தை டிவிவி தனய்யாவின் இவிவி என்டெர்டெய்ன்மென்ட் எல்எல்பி நிறுவனம் தயாரிக்கிறது. கீரவாணி இசையமைத்துள்ளார். ரசிகர்களில் பெறும் எதிர்பார்ப்பில் [RRR] இரத்தம் ரணம் ரெளத்திரம்.
-யாழினி சோமு