‘பாலன் தி பாய்’ டிரெய்லர் : 5 மொழிகளில் மிரட்டும் சிதம்பரம் – ஜீத்து கூட்டணி!

‘பாலன் தி பாய்’ டிரெய்லர் : 5 மொழிகளில் மிரட்டும் சிதம்பரம் – ஜீத்து கூட்டணி!

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவின் Marche du Film-ல் திரையிடப்பட்டு, உலக சினிமா ரசிகர்களின் ஒட்டுமொத்த பாராட்டுகளையும் அள்ளிய “பாலன் தி பாய்” திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இணையத்தைக் கலக்கி வருகிறது!

இப்படத்தின் மாஸான டிரெய்லரை இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான சூர்யா சிவகுமார் (தமிழ்), அஜய் தேவ்கன் (இந்தி), நாக சைதன்யா (தெலுங்கு) மற்றும் ராஜ் பி. ஷெட்டி (கன்னடம்) ஆகியோர் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து, படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.‘ஜான் எ மேன்’, ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ என அடுத்தடுத்து ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில், ‘ரோமாஞ்சம்’, ‘ஆவேசம்’ புகழ் ஜீத்து மாதவன் கதையில் உருவாகியுள்ள இப்படம், அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்களிடம் ஏகப்பட்ட எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

அடையாளம், பொறுப்புணர்வு மற்றும் உயிர்பிழைப்புக்கான போராட்டம் ஆகிய ஆழமான மனித உணர்வுகளை மையமாகக் கொண்டு, சஸ்பென்ஸ் மற்றும் எமோஷன் நிறைந்த ஒரு பக்கா தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸாக இந்த டிரெய்லர் அமைந்துள்ளது.கே.வி.என். புரொடக்ஷன்ஸ்‌ மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள “பாலன் தி பாய்” திரைப்படம், வரும் ஜூன் 19 அன்று மலையாளம், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

 

Related Posts