“விருது கிடைக்காதவர்கள் விமர்சிக்கிறார்கள்!”: ‘சேசிங்’ பட இயக்குநர் வீரக்குமார் அதிரடி!

“விருது கிடைக்காதவர்கள் விமர்சிக்கிறார்கள்!”: ‘சேசிங்’ பட இயக்குநர் வீரக்குமார் அதிரடி!

தமிழக அரசு, திரைக்கலைஞர்களுக்கு விருதுகள் அறிவித்துள்ள நிலையில், திரைத்துறையினர் சிலர், இது குறித்து விமர்சித்து வருகின்றனர்.

இந்தநிலையில்  இயக்குநர் வீரக்குமார், “விருதுகள் நேர்மையாக வழங்கப்பட்டு உள்ளன” என தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்து உள்ளதாவது:

“விருதுகள் அறிவிக்கப்படும் போதெல்லாம் எழும் விமர்சனக் குரல்கள் ஒன்றும் புதியவை அல்ல. தங்களுக்குப் பிடித்தவர்களுக்குப் பட்டியலில் இடமில்லாத ஆதங்கத்தில் சிலர் முன்வைக்கும் கருத்துகள் எப்போதும் விவாதப் பொருளாகவே இருக்கின்றன. ஆனால், இந்த முறை தமிழக அரசின் சினிமா விருதுகள் தேர்வில் மிகுந்த நேர்மையும் வெளிப்படைத்தன்மையும் கடைப்பிடிக்கப்பட்டிருப்பதாகவே நான் கருதுகிறேன். அரசியல் கலப்பற்ற, தகுதியின் அடிப்படையிலான அங்கீகாரமாகவே இது எனக்குத் தோன்றுகிறது.

இதற்கு ஒரு சான்றாகவே நான் இயக்கிய ‘சேசிங்’ படத்திற்கு வழங்கப்பட்டுள்ள சிறந்த சண்டைக் காட்சிகளுக்கான விருதினைப் பார்க்கிறேன். வெறும் சொல்லாக அல்லாமல், செயலாகவே இதனை நிரூபிக்க விரும்புகிறேன். இந்தப் படம் தற்போது இணையத்தில் (YouTube) காணக் கிடைக்கிறது. நீங்களே திரையிட்டுப் பாருங்கள்! அந்த அதிரடி காட்சிகளின் உழைப்பையும் தரத்தையும் நேரில் கண்டு, இந்த விருது தகுதியானதுதானா என்பதை நீங்களே உறுதி செய்துகொள்ளுங்கள். ஒரு படைப்பாளியின் உழைப்பிற்கு வழங்கப்பட்ட இந்த அங்கீகாரம் முழுமையான தகுதியின் அடிப்படையில் அமைந்தது என்பதில் எனக்குத் திண்ணமான நம்பிக்கை இருக்கிறது.” – என்று தெரிவித்து உள்ளார்.

Related Posts