“அவள் பெயர் ரஜ்னி” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

“அவள் பெயர் ரஜ்னி” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

நவரசா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாள்ஸ் ஜெயராம் நடிக்கும் பரப்பரான இன்வெஸ்டிகேசன் திரில்லர் திரைப்படம் “அவள் பெயர ரஜ்னி”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமஸ் வெளியிட்டார்.

விக்ரம், நட்சத்திரம் நகர்கிறது படங்களின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் வெளியாகும் அடுத்த திரைப்படம் இதுவாகும். தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகியுள்ள இப்படம், நொடிக்கு நொடி திருப்பங்களுடன் ரசிகர்களை இருக்கை நுனியில் வைக்கும், துப்பறியும் வகை திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது.

இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, நமீதா பிரமோத், ரெபா மோனிகா ஜான் மற்றும் சைஜு குருப், அஸ்வின் குமார், கருணாகரன், ஷான் ரோமி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வெளியிட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு திரில்லர் திரைப்படத்திற்கான கச்சிதமான போஸ்டராக ஆவலை தூண்டும் வகையில் இப்போஸ்டர் அமைந்துள்ளது.

சென்னை பொள்ளாச்சி கொச்சின் ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமான நடைபெற்று வருகிறது. விரைவில் டீசர் மற்றும் டிரெய்லர் அறிவிப்புகள் வெளியாகும்.

Related Posts