‘அதிரடி’: தமிழ்ப் பெயரில் வெளியான மலையாள படம் தமிழுக்கே வருகிறது!

‘அதிரடி’: தமிழ்ப் பெயரில் வெளியான மலையாள படம் தமிழுக்கே வருகிறது!

ருண் அனிருதன் இயக்கத்தில் டொவினோ தாமஸ், பசில் ஜோசப், வினீத் ஸ்ரீனிவாசன், ரியா ஷிபு மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “அதிரடி.” பசில் ஜோசப் மற்றும் அனந்து எஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அருண் அனிருதன் மற்றும் பால்சன் ஸ்கரியா இணைந்து எழுதியுள்ளனர். கடந்த வாரம் மலையாளத்தில் வெளியான இந்த படம் வரும் 22 ஆம் தேதி தமிழில் வெளியாக இருக்கிறது. தமிழில் இப்படத்தை பைவ் ஸ்டார் செந்தில் வெளியிடுகிறார். இந்த நிலையில் அதிரடி படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினருடன், இந்திய அணி கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

“சிறு வயசுல இருந்தே ‘அதிரடி’ங்கிற வார்த்தையை நிறைய கேட்டிருக்கேன். இப்போ அதே தலைப்புல நடிச்சது செம மாஸ்” என்று மேடையில் எனர்ஜியோடு பேசத் தொடங்கினார் பசில் ஜோசப்.

  • இயக்கமா? நடிப்பியா?: “நடிப்புங்கிறது பேசஞ்சர் சீட்ல உட்கார்ந்து வர்ற மாதிரி; ஆனா இயக்கம் தான் டிரைவர் சீட்! எனக்கு எப்போதுமே டிரைவர் சீட்ல உட்காரத்தான் பிடிக்கும்” என பன்ச் வைத்தார்.

  • தமிழ் பாசம்: “ஆரம்பத்துல தமிழ் டப்பிங் கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும், அப்புறம் சூப்பரா வந்துடுச்சு. தமிழ் ரசிகர்களோட அன்பு எப்போதுமே பிரமிப்பானது!”


  “தட்றோம்.. தூக்கறோம்!” – மேடையைக் கலக்கிய சஞ்சு சாம்சன்!

விழாவின் பிரதான ஈர்ப்பாக கலந்துகொண்ட இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சஞ்சு சாம்சன், சென்னை ரசிகர்கள் காட்டும் அன்பில் நெகிழ்ந்துபோனார்.

“பசில் கூப்பிட்டா வராமல் இருக்க முடியுமா? படத்துல சின்ன ரோல்னு சொன்னாங்க, அதான் வேணாம்னுட்டேன். நடிச்சா பெரிய ரோலா தான் நடிப்பேன்!” என்று கலகலப்பாகப் பேசினார்.

  • சென்னை டூ சென்னை: “இப்போ சி.எஸ்.கே அணிக்கு வந்த பிறகு பொறுப்பு ரொம்ப அதிகமாயிடுச்சு. வெளியில போகும்போது ரசிகர்கள் ‘சேட்டா.. அடுத்த மேட்ச் ஜெயிங்க, தட்றோம் தூக்கறோம்’னு சொல்லும்போது அவ்ளோ சந்தோஷமா இருக்கு. தமிழ்நாடு இப்போ எனக்கு ரெண்டாவது வீடு!”

  • நாயர் மெஸ் சாப்பாடு: “சென்னையில எனக்கு சாப்பாடு ரொம்ப பிடிக்கும். போன வாரம் கூட நாயர் மெஸ்ல சாப்பிட்டேன், சாப்பாடு சும்மா அற்புதம்!” என சென்னை டச்சோடு முடித்தார்.


தியேட்டர்களைக் கொண்டாட வைக்க வரும் கல்லூரித் திருவிழா!

  • இயக்குநர் அருண் அனிருதன்: “அதிரடிங்கிறது பக்கா தமிழ் வார்த்தை. பசில் ஜோசப் தான் இந்தத் தலைப்பைப் பரிந்துரைத்தார். இது ஒரு ஜாலியான கல்லூரி நிகழ்வை மையமாகக் கொண்ட கதை. தமிழ் ரசிகர்களுக்குக் கண்டிப்பா பிடிக்கும்.”

  • எழுத்தாளர் பால்சன் சக்ரியா: “சும்மா மலையாளத்துல இருந்து அப்படியே மொழிபெயர்க்காம, தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏத்த மாதிரி மெனக்கெட்டு வசனங்களை எழுதியிருக்கோம். தியேட்டர்ல வந்து என்ஜாய் பண்ணுங்க!”

டொவினோ தாமஸ், பசில் ஜோசப், வினீத் ஸ்ரீனிவாசன் கூட்டணியில், பைவ் ஸ்டார் செந்தில் வெளியீட்டில் உருவாகியிருக்கும் இந்த எண்டர்டெய்னர் மூவி, மே 22 முதல் தியேட்டர்களில் கலகலக்கத் தயார்!

Related Posts