அசோக்செல்வன் -கீர்த்திபாண்டியன் நடிக்கும் ‘புளூஸ்டார்’ 25வெளியீடு!

அசோக்செல்வன் -கீர்த்திபாண்டியன் நடிக்கும் ‘புளூஸ்டார்’ 25வெளியீடு!

 

அசோக்செல்வன், கீர்த்திபாண்டியன், சாந்தனு, பிரித்வி, திவ்யாதுரைசாமி நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் ‘புளூஸ்டார்.’ இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஜெய்குமார், தனது முதல் படமாக இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான கிரிக்கெட் விளையாட்டு, அதைச்சுற்றி நடக்கும் நட்பு, காதல் என்று ஜனரஞ்சகமான படைப்பாக உருவாகியுள்ளது இந்த படம்.

பாடல்களை அறிவு, உமாதேவி எழுத கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். தமிழழகன் ஒளிப்பதிவு செய்கிறார்.

‘லெமன் லீப் கிரியேசன்ஸ்’ ஆர். கணேசமூர்த்தி, ஜி.செளந்தர்யா, ‘நீலம் புரொடக்சன்ஸ்’ பா. இரஞ்சித் இணைந்து தயாரித்துள்ளனர்.

படம் வரும் ஜனவரி 25-ம் தேதி வெளியாகிறது. ‘சக்தி ஃபிலிம் பேக்டரி’ நிறுவனம் வெளியிடுகிறது.

Related Posts