ரெட்ட தல: அருண் விஜய் 36ன் அசத்தலான தலைப்பு அறிவிப்பு!

ரெட்ட தல: அருண் விஜய் 36ன் அசத்தலான தலைப்பு அறிவிப்பு!

BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற்கு, “ரெட்ட தல” எனப் பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தின் தலைப்புடன் கூடிய அசத்தலான ஃபர் ஸ்ட் லுக் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவினில்  தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன், “இந்த நாளுக்காக நிறைய உழைத்திருக்கிறோம். இந்தப்படத்திற்குப் பர்ஃபெக்டான ஹீரோ அருண் விஜய் தான். பல படங்களைத் தொடர்ந்து நாங்கள் எடுக்கவுள்ளோம்” என்றார்.

BTG நிறுவன நிர்வாகத் தலைமை அதிகாரி மனோஜ் பினோ, “இப்போது சினிமாவின் வியாபாரம் மாறியிருக்கிறது. யார் நடிக்கிறார்கள், என்ன படம், என்ன கதைப் படம் எப்படி வரும் என்பதை எப்போது கேட்டாலும், எங்களால் காட்ட முடியும் அது மாதிரி தான் நாங்கள் இயங்கி வருகிறோம். ஒரே நேரத்தில் 3 படங்கள் இப்போது அடுத்த கதைகளையும் கேட்டு வருகிறோம்” என்றார்.இயக்குநர் மோகன் ராஜா, “இன்று 2024ல் நல்ல சினிமா வருவதில்லை என்ற குற்றசாட்டு வருகிறது. அதைப் போக்கும் நிறுவனமாக, இந்த ரெட்ட தலை படத்தை அளிக்கும் பிடிஜி இருக்கும் என நம்புகிறேன். இந்தப்படம் வெற்றிப்படமாக அமையும்.

என்னை என் தம்பியை விட அண்ணா என அன்பாக அழைப்பவர் அருண்விஜய். கிட்டத்தட்ட இத்தனைக் காலம் ஃபிட்னெஸாக உடலை வைத்துக்கொள்வது அத்தனை எளிதில்லை, இந்த உழைப்பிற்கு அருண்விஜய்க்கு இன்னும் பல வெற்றிகள் கிடைக்கும்” என்றார்.

இசையமைப்பாளர் சாம் சி எஸ், “சில படங்களின் டைட்டில் கேட்கும்போது இவ்வளவு நாளா இந்த டைட்டில் வைக்கலையா எனத் தோணும். ரெட்ட தல அப்படி ஒரு டைட்டில். ஃபர்ஸ்ட் லுக் மிரட்டலாக இருக்கிறது” என்றார்.

இயக்குநர் அஜய் ஞானமுத்து, “ஏ ஆர் முருகதாஸ் சாரிடம் வேலைப் பார்த்த போது அவர் எனக்குச் சீனியர். அவர்ப் பயங்கர ஸ்ட்ரிக்ட். மிகப்பெரிய திறமைசாலி அவருக்குச் சரியான ஹீரோவாக அருண் விஜய் கிடைத்துள்ளார். இந்த டைட்டில் மிரட்டலான டைட்டில் ஏ ஆர் முருகதாஸ் சார் வைத்திருந்த டைட்டில். படம் மிகப்பெரிய வெற்றிபெறும்” என்றார்.நடிகர் விஜயகுமார், “ரெட்ட தல மிகச்சிறந்த டைட்டில். வெற்றிகரமான டைட்டில். திருக்குமரன் மிகப்பெரிய திறமைசாலி, கடுமையாக உழைத்து நல்ல திரைக்கதை உருவாக்கி, இந்தப்படம் செய்கிறார். இரண்டு குயின் இருக்கிறார்கள்” என்றார்.

இயக்குநர்க் கிரிஷ் திருக்குமரன், “ஃபர்ஸ்ட் லுக் தனித்துவமாக இருக்க வேண்டும் எனச் சொன்ன போது, ஒரு கான்செப்ட் வைத்து உருவாக்கலாம் என இந்த ஐடியாவை அருண் விஜய் சாரிடம் சொன்னேன். இது என்ன மாதிரி ஐடியா எனக்கேட்டார். இரண்டு மிருகங்கள் ஒன்றை ஒன்று அடித்து சாப்பிட நினைக்கிறது அது தான் கரு என்றேன். எல்லோருக்கும் பிடித்திருந்தது.

அருண் விஜய் உடம்பை வில்லாக வளைத்து, இதற்காக உழைத்துள்ளார். இந்த டைட்டில் ஏ ஆர் முருகதாஸ் சாருடையது, அவரிடம் கேட்டேன், அவர் வைத்துக்கொள் என அன்போடு தந்தார்” என்றார்.

நடிகர் அருண்விஜய், “இந்தப்படம் எனக்கு மிக நெருக்கமான படம். இந்தக்கதை மிக மிகப் பிடித்த கதை. படம் மீது இப்போதே நல்ல பாஸிடிவிட்டி இருக்கிறது. சாம் சி எஸ் உடன் ஏற்கனவே வேலைப் பார்த்துள்ளேன். இந்தப்படம் அவருக்கு வெற்றிப்படமாக இருக்கும். உங்களை மகிழ்விக்கக் கண்டிப்பாக கடுமையான உழைப்பைத் தருவோம். இந்தப்படம் கண்டிப்பாக உங்களை ஆச்சரியப்படுத்தும்” என்றார்.

நடிகர் அருண் விஜய் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், சித்தி இத்னானி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார், இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ், யோக் ஜேபி, வின்செண்ட் அசோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.இப்படத்தினை BTG Universal நிறுவனம் சார்பில் திரு.பாபி பாலச்சந்திரன், மிகப்பெரும் பொருட்செலவில்,  அருண் விஜய் திரை வாழ்க்கையில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பிரம்மாண்ட படைப்பாகத் தயாரிக்கிறார்.

தமிழ் திரையுலகில் பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் தலைமை நிர்வாக இயக்குநராக பணியாற்றிய திரு டாக்டர் M.மனோஜ் பெனோ, தற்போது BTG Universal நிறுவனத்தின் தலைமை திட்ட இயக்குநராக பொறுப்பேற்று திரைப்படங்களின் அனைத்து நிர்வாகப் பணிகளையும் செய்து வருகிறார்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் CS இசையமைக்கிறார்.  டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டர் ஆண்டனி எடிட்டிங் செய்கிறார். மாஸ்டர்ஸ் அன்பறிவு மற்றும் பிரபு மாஸ்டர் இணைந்து சண்டைக்காட்சிகளை வடிவமைக்கவுள்ளனர்.  அருண்சங்கர் துரை கலை இயக்கம் செய்கிறார். கிருத்திகா சேகர் உடை வடிவமைப்பு பணிகளைச் செய்கிறார். பப்ளிசிட்டி டிசைனிங் பணிகளை சசி & சசி செய்கிறார்கள். வெங்கட்ராம் பப்ளிசிட்டி போட்டோகிராஃபராக பணியாற்றுகிறார். மக்கள் தொடர்பு பணிகளை சதீஷ், சிவா (AIM) செய்கிறார்கள்

Related Posts