சினிமா விமர்சனம்:அரிமாபட்டி சக்திவேல்

சினிமா விமர்சனம்:அரிமாபட்டி சக்திவேல்

‘சாதிக்குள்தான் திருமணம் செய்ய வேண்டும்’ என்கிற கொள்கை(!) கோட்பாடு(!) கொண்ட கிராமம். அந்த ஊரைச் சேர்ந்த சக்திவேல் என்கிற இளைஞன், வேறு சாதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து மணமுடிக்கிறான். இதனால் ஏற்படும் விளைவுகள்தான் கதை.

காதலனாக – நாயகனாக நடித்து இருக்கிறார் பவன். காதலிக்கிறார், எதிரிகளை பந்தாடுகிறார், நியாயத்துக்காக குமுறுகிறார்… எல்லாம் சரிதான். ஆனால் முகத்தை மட்டும் எப்போதும் பரிதாபமான தோற்றத்தில் வைத்துக் கொள்கிறார்.

நாயகி மேக்னா , அழகாக இருக்கிறார். கொஞ்சமாய் நடிக்கவும் முயற்சி செய்து இருக்கிறார்.

நாயகனின் அப்பாவாக வருகிறார் சார்லி. பெரும்பாலான படங்களைப்போலவே இதிலும், அப்பாவித்தனமான தோற்றம், பேச்சு, நடிப்பு.  சிறந்த நடிகரை, ஒரே மாதிரி பயன்படுத்தும் தமிழ்த் திரையுலகை என்னவென்று சொல்வது?காதலுக்கு முழு எதிரியாக.. நாயகியின் அண்ணனான ஆக்ரோசமாக நடித்து உள்ளார் பிர்லா போஸ். தங்கையின் காதலை அறிந்து கொதிப்பது, காதலனை எச்சரிப்பது, சொந்தக்காரர்கள் கிண்டல் செய்யும் காட்சியில் குமுறி நிற்பது என பக்கா வில்லன்.

‘நான் அரசியல்வாதி அன்பழகன்’ என காட்சிக்குக் காட்சி சொல்கிறார்  இமான் அண்ணாச்சி. இதில் என்ன காமெடி என்று தெரியவில்லை.

‘சூப்பர்குட்’ சுப்ரமணி, அழகு, கராத்தே வெங்கடேஷ் என பலரும் இருக்கிறார்கள்.

மணி அமுதவன் இசையில் அந்தோணி தாசன் பாடியிருக்கும் ‘வண்ண வண்ண எறகு நீ’ பாடல்  ரசிக்கவைக்கிறது.

ஜெ பி மேன் ஒளிப்பதிவு கிராமத்தை – அதன் அழகை – மனிதர்களை கண் முன் நிறுத்துகிறது.

 

இன்னனும் பல மனிதர்களின் மனதில் புரையோடிப் போயிருக்கும் சாதி வெறியை சொல்கிற படம். அந்த வகையில் கதை, திரைக்கதை எழுதிய (நாயகன்) பவன், இயக்குநர் ரமேஷ் கந்தசாமி ஆகியோரை

பாராட்டலாம். ஆனால் சொன்ன விதத்தில் இன்னும் மெனக்கெட்டு இருக்கலாம்.

Related Posts