அந்த 7 நாட்கள்: திரை விமர்சனம்
முரளி & கபிர்தாஸ் தயாரிக்க எம் சுந்தர் இயக்கத்தில் அஜிதேஜ், ஸ்ரீ ஸ்வேதா, கே பாக்யராஜ், நமோ நாராயாணா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் அந்த ஏழு நாட்கள்.
வானியல் துறை படிக்கும் மாணவர் ஆதித்யா. 300 ஆண்டுகளுக்கு பிறகு வரும் சூரிய கிரகணத்தை, பழைய டெலஸ்கோப் மூலம் பார்க்கிறார். அப்போது அவருக்கு ஒரு அபூர்வ சக்தி கிடைக்கிறது. யாருடைய கண்களையாவது பார்த்தால் அவர்கள் மரணமடையும் நேரம் அவருக்கு தெரிந்து விடுகிறது.
இதற்கிடையில் இளம் பெண் நிலாவுடன் காதல் அரும்புகிறது. ஒரு நாள், நிலாவின் கண்களை பார்க்கும் ஆதித்யாவுக்கு, விரைவில் நிலா இறந்து விடுவார் என்று தோன்றுகிறது. காதலியை மரணத்தில் இருந்துகாப்பாற்றப ோராடுகிறார்… இன்னொரு பக்கம் காதலியின் குடும்பத்தினர் ஆதித்யாவுக்கு குறிவைக்கின்றனர்.
இறுதியில் என்ன ஆனது என்பதே கதை.

சச்சின் சுந்தர் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணியும் கதையுடன் ஒன்றி ரசிக்கச் செய்கிறது.
மெலடி மெட்டுக்களை வாசித்திருக்கிறது.
கோபிநாத் துரையின் ஒளிப்பதிவு இதம். குறிப்பாக மலை,காடு என நம்மையும் குளு குளு பிரதேசத்துக்கு அழைாத்துச் சென்றுவிட்டது.
காதலின் உச்சத்தைச ்சொல்லி இருக்கிறார் சச்சின் சுந்தர். பார்த்து ரசிக்கலாம்.
