பெய்ரூட் போன்று இன்னொரு விபத்து! ரஷ்யா மக்கள் அச்சம்

மாஸ்கோ: கொரோனா அச்சுரத்தல் ஒரு புறம் என்றால் அங்கங்கே வெடித்து சிதறும் வெடிபொருள்,அமோனியம் என ஒருபக்கம் மக்களை மிரட்டிவருகிறது. சமிபத்தில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த அமோனியம் நைட்ரேட் கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.  பல ஆயிரம்பேர் பாதிக்கப்பட்டனர். இச்சம்பவம்  நடந்து சில நாட்களே ஆன நிலையில் மக்களை  மீண்டும் ஒரு சம்பவம் அச்சுரித்தியுள்ளது.

ரஷ்யாவின் மிகப் பெரிய அலுமினிய சுத்திகரிப்பு ஆலையின் அனல்
மின்நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ரஷ்யாவின் சைபீரியா மகாணத்தில் அசின்ஸ்க் நகரில் மிகப் பெரிய அலுமினிய சுத்திகரிப்பு நிலையம் இயங்கி வருகிறது. இது உலகின் 2-வது மிகப் பெரிய ஆலையாகும். இது  அலுமினிய சுத்திகரிப்பு நிறுவனமான RUSAL-க்கு சொந்தமானது இந்த ஆலை.

ஆலையின் இடத்தில் அனல்மின் நிலையம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இங்கு எதிர்பாராத விதமாக திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விபத்தில் பல அடி உயரத்து தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தை உள்ளூர் வாசிகள் தங்களது செல் போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த விபத்தில் உயிர் சேதம் ஏற்பட்டத என்பது குறித்து தகவல் வரவில்லை என்பது குறிப்பிடதக்கது.

யாழினி சோமு