அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ அதிரடி முதல் சிங்கிள்! ஜிவி பிரகாஷ் கலக்கல்!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’  அதிரடி முதல் சிங்கிள்! ஜிவி பிரகாஷ் கலக்கல்!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்திருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக உள்ளது.   இதன் காரணமாக படத்திலிருந்து அடுத்தடுத்து அப்டேட்டுகள் வர ஆரம்பித்து இருக்கின்றன.

சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி மாஸான வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்திலிருந்து முதல் சிங்கிள் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் ஆனது.  அஜித்தின் அதி தீவிர ரசிகர் ஆதிக் ரவிச்சந்திரன் என்பதால் நிச்சயமாக ஒவ்வொரு ஃப்ரேமையும்  ரசித்து ரசித்து உருவாக்கி இருப்பார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.  அதனை உறுதிப்படுத்தும் விதத்தில்தான் குட் பேட் அக்லி டீசர் அமைந்து இருந்தது.

இந்நிலையில் படத்தின் முதல் சிங்கிளான ஓஜி சம்பவம் இன்று ரிலீஸாகும் என்று கூறி நேற்று ப்ரோமோ வெளியானது. அதில் ஜிவி, ஆதிக் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். அதன்படி இன்று படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் ஆனது. . பெயருக்கு தகுந்தாற்போலவே பாடலில் ஜிவி பிரகாஷ் சம்பவம் செய்திருப்பதாக பாடலை கேட்ட ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கூறிவருகிறார்கள். இப்போது அந்தப் பாடல் சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.