டில்லி, சீனா, பெங்களூரு: ‘அது வாங்குனா இது இலவசம்’ பெரிய சம்பவம் பண்ணும் போலயே!

டில்லி, சீனா, பெங்களூரு: ‘அது வாங்குனா இது இலவசம்’ பெரிய சம்பவம் பண்ணும் போலயே!
செக்ஸோ, சரக்கோ…எல்லாவற்றையும் விட கிக்கானது, ‘அது வாங்கினா இது இலவசம்’ என்கிற வாசகம்.  அந்தக் காலத்தில், ஆடி மாசம்  – அதுவும் துணிக்கடைகளில் – மட்டும  இப்படியான விற்பனை நடக்கும்! இப்போ, எல்லா வியாபாரத்திலும், எல்லா காலத்திலும், ஸேம் ஐடியா சக்கை போடு போடுது!
ஒரு கவர்மெண்ட்டே இப்படி செஞ்சுச்சே!
டில்லி மாநில அரசு,  ஒயின் ஷாப்புகள் அனைத்திலும், “ஒரு சரக்கு பாட்டில் வாங்கினா, இன்னொன்னு இலவசம்” என்கிற அறிவிப்பு வெளியிட, ஏக களேபாரமானது. பிறகு அந்த அறிவிப்பை அரசு திரும்பப்பெற்றது.
சீனாவில் தனியார் நிறுவனம் இன்னொரு விதத்தில் ஸ்கோர் செஞ்சு ஒட்டுமொத்த நாட்டையே திரும்பிப் பார்க்க வச்சுது.
‘ஹவுஸ் ஒய்ப்’  நமக்குத் தெரியும்… ‘ஹவுஸ் வாங்கினா, ஒய்ப்  இலவசம்’ என்று விளம்பரம் செய்தது இந்த ரியல் எஸ்ட்டேட் நிறுவனம். சீனாவே அதிர்ந்தது.
 பிறகு அந்த நிறுவனம், “அட.. வீடு வாங்கி மனைவிக்கு கொடுங்க அப்படிங்கிற அர்த்தத்திலதான் சொன்னோம்”  என சமாளித்தது.
இப்போ, “அது வாங்கினா இது இலவசம்” என்கிற ஈர்ப்பான தலைப்பில் திரும்பிப் பார்க்க வைத்து இருக்கிறது புதிய திரைப்படம் ஒன்று.
ஸ்ரீஜா சினிமாஸ் தயாரிப்பில் எஸ்.கே.செந்தில் ராஜன் இயக்கும் இப்படத்தில், விஜய் டிவி புகழ் ராமர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.   கன்னட ஹீரோயின் பூஜாஸ்ரீ,  கலையரசன், சூப்பர் குட் சுப்பிரமணி, மாரிஸ் ராஜா, சம்பத், மீசை ரமேஷ், அருண், அம்மையப்பன் பாலாஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.
விஜய் டிவி ராமர் ‘காமநெடி’க்கு பெயர் போனவர். ஆனால் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில், ரத்தக் காயத்துடன் சீரியஸாக தலைகாட்டுகிறார்.
அதே போல, பெங்களூரு ஓட்டல் ஒன்றில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை அடிப்படையாக் கொண்டு புனையப்பட்ட கதை என்று ஒரு தகவல் உலவுகிறது.
அதற்கேற்றபடி பட இயக்குநர் செந்தில் ராஜன், “ஒரு சிலர் செய்யும் தவறுகளால் மற்றவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதைச் சொல்லும் படம் இது. இதுவரை பார்க்காத ஒரு ராமரை இந்த படத்தில் பார்க்கலாம்” என்று ஆர்வத்தை அதிகப்படுத்துகிறார்.

இந்த படத்திற்கு அர்வின் ராஜ் இசையமைக்க, ஒளிப்பதிவை விக்னேஷ் மலைச்சாமி கவனிக்க, நாகராஜன்.டி படத்தொகுப்பு செய்துள்ளார்.

நடன இயக்குநர் சரவணன், ” ஒரு முழு பாடல் முழுவதும் மழையில் நனைந்தபடி படமாக்கப்பட்டுள்ளது. இன்னொரு ஐட்டம்   பாடலை ஒரே நாளில் படமாக்கினோம்” என்று சொல்லி ஹைப் ஏற்றுகிறார்.

படப்பிடிப்பு முடிவடைந்து படம் ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது.

பிப்ரவரி 14 அன்று வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை ஆக்சன் ரியாக்சன் நிறுவனம் சார்பில் ஜெனீஷ் தமிழ்நாடு எங்கும் வெளியிடுகிறார் .

காதலர் தினத்தில் வரும் இந்த க்ரைம் ஸ்டோரி, பெரிய அளவில் சம்பவம் செய்யும் என்றே தோன்றுகிறது.

Related Posts