விண்ணைத் தொடும் கனவு: சென்னைஸ் அமிர்தாவில் நடிகை ஸ்ரீலீலா உற்சாக விசிட்!

விண்ணைத் தொடும் கனவு: சென்னைஸ் அமிர்தாவில் நடிகை ஸ்ரீலீலா உற்சாக விசிட்!

சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் கல்லூரியின் தூதர் நடிகை ஸ்ரீலீலா, கல்லூரிக்கு நேரில் வந்து மாணவர்களுடன் கலகலப்பாக உரையாடினார். அங்குள்ள உலகத்தர உள்கட்டமைப்பு, நிஜ ஏர்போர்ட் போன்ற சிமுலேஷன் வசதிகள் மற்றும் இன்ஜின் பயிற்சி முறைகளை அவர் வியந்து பாராட்டினார்.இந்த விழாவில், சென்னைஸ் அமிர்தா குழும தலைவர் பூமிநாதன் அவர்கள் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ₹28 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கினார்.

பயிற்சியின் போதே பகுதிநேர வேலை மூலம் மாணவர்கள் மாதம் ₹35,000 வரை ஈட்டுவதை ஸ்ரீலீலா வெகுவாகப் புகழ்ந்தார். மாணவர்களின் கலைத்திறனை ரசித்ததோடு, ஐந்து நாட்டு உணவுகளையும் ருசித்து மகிழ்ந்தார். அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது தாயார் பற்றி அவர் பகிர்ந்த உருக்கமான நினைவுகள் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது.

சினிமா முதல் பிட்னஸ் வரை மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் புன்னகையுடன் பதிலளித்துத் தன்னம்பிக்கை ஊட்டினார். இதுவரை 31,650-க்கும் அதிகமானோரை வேலைக்கு அமர்த்தியுள்ள இந்நிறுவனம், அண்மையில் ஏர் ஆசியா மூலம் 170 மாணவர்களுக்குச் சர்வதேச வாய்ப்புகளைப் பெற்றுத் தந்து கெத்து காட்டியுள்ளது.