“பயித்தியம் காவாலி வெட்டிப்பயலுவோ..!”: விஜய் கட்சி பிரமுகர் ஆவேசம்!

“பயித்தியம் காவாலி வெட்டிப்பயலுவோ..!”: விஜய் கட்சி பிரமுகர் ஆவேசம்!

நடிகர் விஜய் துவங்கி இருக்கும் தமிழக தமிழக வெற்றிக் கழகத்தை விமர்சிப்பவர்களை, ‘காவாலிப்பயலுக, பயித்தியக்காரனுக, தற்குறிக, வெட்டிப்பயலுக’ என கடுமையாக பேசியிருக்கிறார் அக்கட்சி பிரமுகரான லயோலா மணி.த.வெ.க. பேச்சாளரான, லயோலா மணி, நேற்று முன்தினம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.

கட்சிப் பாடல்களில் வைக்கப்பட்டுள்ள தமிழ் வார்த்தைகளில் உள்ள பிழைகள், எளிதாக விஜயை ரசிகர்கள் – தொண்டர்கள் சந்திக்க முடியவில்லை என்கிற விமர்சனம் குறித்து கேட்கப்பட்டது.

மேலும், த.வெ.க. கட்சி கொடி குறித்து பலரும் சமூகவலைதளங்களில் விமர்சிக்கிறார்களே என்று கேட்கப்பட்டது.

ஆரம்பத்தில்  தன்னால் இயன்றவரை விளக்கினார் லயோலா மணி. பிறகு ஆத்திரமானவர், “வேலைவெட்டி இல்லாத பயலுவோதான் விமர்சிப்பானுங்க.. தற்குறிங்க.. இவனுங்களுக்கு யாரையாவது சொறியறதுதான் வேலை! இவனுகளால பத்து பைசா பிரயோசனம் கிடையாது! காவாலிப்பயலுக” என சரமாரியாக திட்டினார்.

இந்த பேட்டி லிங்க்கை,  லயோலா மணி தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.