சிக்கல்: விஜயின் ‘மாஸ்டர்’ 13ம் தேதி வெளியாகுமா?
விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும், மாஸ்டர் படம் அறிவித்தபடி 13ம் தேதி வெளியாகுமா என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது.
கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் கடுமையான நஷ்டத்தை எதிர்கொண்டனர். அத்துடன் ஏராளமான திரையரங்க ஊழியர்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர். அதன்பின்னர், மத்திய அரசு அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்கலாம் என அனுமதியளித்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு அன்றைய தினம் தமிழகத்தில் திரையரங்குகளை இயக்க அனுமதி அளிக்கவில்லை.
நவம்பர் 10 ஆம் தேதிதான் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதுவும், 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் விஜய் நடித்துள்ள மாஸ்டர், சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் ஆகியவை பொங்கல் தினத்தை முன்னிட்டு 13ம் தேதி வெளியாகின்றன.
இருவருமே பெரிய நட்சத்திரங்கள். அதுவும் விஜய், திரையுலகின் உச்சத்தில் இருப்பவர். கணிசமான சம்பளம் வாங்குபவர்.
50 சதவிகித பார்வையாளர்கள் மட்டும் திரையரங்கில் அனுமதிக்கப்பட்டால், தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்காது.
இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, அதிகாரப்பூர்வமற்ற முறையில் விஜய் சந்தித்ததாக தககவல் வெளியானது.
இந்நிலையில், திரையரங்குகளை 100 சதவிகித பார்வையாளர்களுடன் இயக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.
இதற்கு மருத்துவத்துறையின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் கொரோனா விரைவில் அதிக பேருக்கு பரவ வாய்ப்பிருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். திரைத்துரையிலேயே சிலரும் கண்டனண் தெரிவித்தனர்.
இந்நிலையில், திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதித்திருப்பது விதிமீறல் என தெரிவித்துள்ள மத்திய அரசு, 100% அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.