வடக்குப்பட்டி ராமசாமி: “நோ காண்ட்ரவசி!”: சந்தானம் விளக்கம்!

வடக்குப்பட்டி ராமசாமி: “நோ காண்ட்ரவசி!”: சந்தானம் விளக்கம்!

சந்தானம் நாயகனாக நடிக்க, கார்த்திக் யோகி இயக்கத்தின் உருவாகி இருக்கும் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. அதில், ‘கடவுள் இல்லைன்னு சொல்வானே ராமசாமி, அவனா  நீ?’ என்ற வசனம் இடம் பெற்றது.

‘இது, தந்தை பெரியாரை கிண்டலடிப்பதாக ஊள்ளது’ என கண்டனங்கள் எழுந்தன. உடனடியாக, இது குறித்த ட்விட்டை டெலிட் செய்தார் சந்தானம். ஆனால் விளக்கம் ஏதும் அளிக்கவில்லை.

இந்நிலையில் இன்று நடைபெற்ற வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் விளக்கம் அளித்தார்.

“இந்த திரைப்படத்தில் சர்ச்சையான விஷயங்கள் எதுவும் இல்லை, முழுக்க முழுக்க ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே எடுக்கப்பட்டிருக்கிறது” என தெரிவித்தார்.

Related Posts