அந்த’கண்’: ரகசியம் உடைத்த இயக்குநர் தியாகராஜன்!
தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நாயகனாக நடிக்கும் அந்தகன் படம், ஆகஸ்ட் 9ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தியில் பெரிய அளவில் வெற்றி பெற்ற அந்தாதூன் என்ற பாலிவுட் படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படக்குழுவினர்,”இது ரீமேக் படம் அல்ல.. ரீமேட் படம்” என்று அறிவித்தது எதிர்பார்ப்பை எகிறச் செய்து இருக்கிறது.
இந்நிலையில் படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா நடந்தது. அப்போது இயக்குநர் தியாகராஜனிடம், ” படத்தின் ட்ரெயிலரில் சில காட்சிகளில் கண் தெரிந்தவராகவும் சில காட்சிகளில் கண் தெரியாதவரை போலவும் பிரஷாந்த் வருகிறார். உண்மையில் அவருக்கு கண் தெரியுமா தெரியாதா” என்று கேட்கப்பட்டது.இதற்கு பதிலளிக்க பிரஷாந்த் முயன்ற நிலையில் அவருக்கு பதிலாக இந்த கேள்விக்கு பதிலளித்தார் தியாகராஜன். அவர், “பிரசாத்திற்கு கண் தெரியுமா தெரியாதா என்பதுதான் இந்த படத்தின் ட்விஸ்ட்” என்று விளக்கம் அளித்தார்.
மேலும், “படத்தில் பிரஷாந்துடன் இணைந்துள்ள கேரக்டர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த சந்தேகம் தொடர்ந்து இருந்துக் கொண்டே இருக்கும்; இதன் எதிர்பார்ப்பு படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் இருக்கும்” என்றார்.
தொடர்ந்து பேசிய பிரசாந்த், கண் தெரியாதவராக நடிப்பதற்காக தான் மேற்கொண்ட மெனக்கெடல்கள் குறித்தும் பிரசாந்த் பகிர்ந்து கொண்டார்.