உயிரிழந்த ரசிகர்.. நேரடியாகச் சென்று அஞ்சலி செலுத்திய அருண் விஜய்
நடிகர் அருண் விஜய் தன்னுடைய ரசிகர் மன்ற அமைப்பாளர் கடந்த வாரம் மறைந்த நிலையில், அவருடைய வீட்டிற்கு நேரில் சென்று குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் பரவி வரும் நிலையில் பல்வேறு, பலரும் நெகிழ்ச்சியான கருத்துக்களை பதிந்து வருகின்றனர்.
நடிகர் விஜயகுமாரின் மகனான அருண் விஜய் பல வருடங்களாக சினிமாவில் நிலைத்திருக்கிறார். ஆரம்பத்தில் சாக்லேட் பாயாக நடித்து வந்த அருண் விஜய் இப்போது வில்லன் ஆகவும் மிரட்டலான ஹீரோவாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
தீவிரமான உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு மூலம் தன்னுடைய உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் அருண் விஜய் தொடர்ந்து பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
தற்போது பாலா இயக்கத்தில் இவர் நடித்துள்ள வணங்கான் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் அவருடைய தென் சென்னை மாவட்ட ரசிகர் மன்ற அமைப்பாளர் திரு நிர்மல் குமார் கடந்த வாரம் உடல் நலக்குறைவால் காலமானார். இந்த நிலையில் நேற்று மதியம் அடையாற்றில் இருக்கும் அந்த ரசிகரின் இல்லத்திற்கு நேரில் சென்று அருண் விஜய் அஞ்சலி செலுத்தி விட்டு ரசிகர் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லிவிட்டு வந்திருக்கிறார். இதுகுறித்து அருண் விஜயை பலரும் பாராட்டி வருகிறார்கள்.