அன்னையின் நினைவாக உழைக்கும் பெண்களை தேடிச் சென்று பரிசளித்த நடிகர் ஆரி அர்ஜுனன்!!

அன்னையின் நினைவாக உழைக்கும் பெண்களை தேடிச் சென்று பரிசளித்த நடிகர் ஆரி அர்ஜுனன்!!

தமிழின் முன்னணி இளம் நடிகர் ஆரி அர்ஜுனன், பெண்கள் ஒவ்வொரு வருமே கொண்டாடப் படவேண்டியவர்கள் தான் என்பதை வழியுறுத்தி தனது அம்மாவின் நினைவை போற்றும் வகையில் மறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை மூலமாக , எளிய வர்க்கத்தின் பின்னணியிலிருந்து பணியாற்றும் பெண்கள்
10 பேரை சந்தித்து வாழ்த்துக்கூறியதுடன், அவர்களுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்டாக தங்க நாணயம் பரிசளித்தார்.

இயற்கை சார்ந்த விவசாயம், இயற்கை உணவுகள், சமூகத்திற்கான உதவிகள் என தொடர்ந்து, சமூக அக்கறையுடன் பணியாற்றி வரும் நடிகர் ஆரி அர்ஜுனன், தன் அன்னையின் நினைவாக மகளிரை கொண்டாடும் வகையில் அவர்களுக்கு பரிசளித்திருப்பதை, மக்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

இது குறித்து ஆரி அர்ஜுனன் கூறுகையில்..
ஒவ்வொரு மகளிரும் ஒவ்வொரு நாளுமே கொண்டாடப்படவேண்டியவர்கள். குறிப்பாக நம் இரத்த உறவுகளான அம்மா, மனைவி, அக்கா, தங்கை, குழந்தை, என அனைவரையும் தாண்டி, நமக்காகவும் இந்த சமூகத்திற்காகவும் உழைக்கக் கூடிய, கோடான கோடி மகளிர்கள் இங்கு இருக்கிறார்கள். என் அம்மாவின் நினைவாக சமூகத்திற்காக உழைக்கும் மகளிர் சிலரைச் சந்தித்து, சர்ப்ரைஸாக ஒரு சின்ன பரிசையும் அளிக்கும் பணியை, இன்று துவங்கியுள்ளேன். அத்தோடு இல்லாமல் எளிய வர்க்கத்தின் வாழ்வாதாரத்தை மாற்றும் வகையில் ஒவ்வரு வருடமும் இதை செய்ய போகிறேன்.

முதலில் வீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டுமல்லவா, என் குடும்பதிர்க்காக உழைக்கும் மனைவிக்கு நன்றி சொல்லி, அனைத்து மகளிருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒரு பெண் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை இந்த சமூகம் சொல்லிக்கொண்டே இருக்கிறது ஆனால் ஒரு ஆண் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை இந்த சமூகம் சொல்லித்தர ஆரம்பிக்க வேண்டும் என்றார்.

சாலைகளை சுத்தம் செய்யும் பணியாளர் 3 பேருக்கும், தெருவோர கூழ் கடை வைத்திருக்கும் பெண்கள் 2 பேர், பெட்ரோல் பங்கில் பணியாற்றும் 3 பேர் மற்றும் திரைப்பட புரடக்சன் யூனிட்டில் பாத்திரம் கழுவும் 2 பேர் என பலதரப்பட்ட பணியாளர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் கூறியதுடன் தங்க நாணணயம் பரிசாக வழங்கினார் நடிகர் ஆரி அர்ஜுனன்.

Related Posts