ஏ.ஆர். ரஹ்மான் மீது வருமான வரித்துறை வழக்கு; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!
சென்னை: பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் மீது வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு சம்பந்தமாக விளக்கமளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் இங்கிலாந்தில் இருக்கும் லிப்ரா என்ற மொபைல்ஸ் நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ரிங் டோன் இசையமைத்துக் கொடுப்பதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டார். இதற்கு அவருக்கு சம்பளமாக ரூபாய் 3 கோடியே 47 லட்சம் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த தொகையை ஏ ஆர் ஆர் அறக்கட்டளைக்கு நேரடியாக செலுத்தும்படி ரஹ்மான் கூறியிருக்கிறார்.
அறகட்டளைக்கு பணம் நேரடியாக செலுத்தினால் வரிமான வரியில் இருந்து ’தப்பிக்கலாம்’ என அவர் முயற்சி எடுத்ததாக கூறி வரிமான வரித்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. விசாரணையில் ரஹ்மான் தரப்பு விளக்கத்தை ஏற்று கொண்ட முதன்மை ஆணையம்’ விசாரணையை கைவிடுமாறு உத்தரவிட்டது.
இந்த உத்தரவு கடந்த ஆண்டு 2019 செப்டம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்டது. அதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை சார்பாக அப்போது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சம்பந்தமாக விசாரித்த நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வு, இந்த மனுவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதிலளிக்கும்படி கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறபித்துள்ளனர்
-யாழினி சோமு